செவ்வாய், 3 ஜூன், 2025

இந்தியாவின் தேசிய மொழி எது? - ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்!

 minnambalam.com  - Selvam : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைத்து ஆதரவு கோர ஏழு எம்.பி-க்கள் கொண்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதில், கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஷ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் விளக்கி வருகின்றனர்.


இந்தநிலையில், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் கனிமொழி உரையாடினார். அப்போது, “இந்தியாவின் தேசிய மொழி எது?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 Madrid, Spain: While addressing the Indian diaspora, DMK MP Kanimozhi said, "The national language of India is unity and diversity. That is the message this delegation brings to the world, and that is the most important thing today…" pic.twitter.com/cVBrA99WK3
    — ANI (@ANI) June 2, 2025

இதற்கு பதிலளித்த கனிமொழி, Kanimozhi says the national language of India
“இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை. இதுதான் தூதுக்குழு உலகிற்கு சொல்லும் செய்தி, அதுதான் இன்றைய மிக முக்கியமான விஷயமும் கூட” என்றார். கனிமொழியின் இந்த பதிலை கேட்டு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

கனிமொழி பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக