![]() |
மின்னம்பலம் : பொதுக்குழுவில் சீறிய வைகோ! . மதிமுக பொதுக்குழுவில் வைகோ ரொம்பவே ஆவேசப்பட்டு விட்டாராமே? என்ன நடந்ததாம்?
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என்று தொடர்ந்து பேசிவருகிறார் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. அவரது பேட்டிக்குப் பின்னரே சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் அக்கட்சியின் தலைவர் ‘ஆடிட்டர்’ அர்ஜூன் ராஜ் தலைமையில் ஜூன் 22-ந் தேதி நடைபெற்றது.
மதிமுகவில் ஏற்கனவே மல்லை சத்யா – துரை வைகோ விவகாரம் பூதாகரமாக வெடித்து வீதிக்கு வந்த காரணத்தினாலோ என்னவோ, இந்த பொதுக்குழுவில், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், பொருளாளர் செந்திலபதிபன் மற்றும் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மட்டுமே பேசினர்.
Digital Thinnai Delhi in the background
இந்தப் பொதுக்குழுவின் தொடக்கத்தில் பேசிய அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ், “ராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றதால்தான் பரதனுக்கு பட்டாபிஷேகமே நடந்தது. உண்மையில் பட்டாபிஷேகத்துக்கு உரியவன் ராமன். அன்று ராமன் வனவாசம் செல்லாமல் இருந்தால் ராமனுக்குதான் முடிசூட்டி இருப்பார்கள்” என ராமனை வைகோவாகவும் பரதனை ஸ்டாலினாகவும் உருவகப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக, திமுகவுக்கு எதிரி அதிமுக – பாஜக. எங்களுக்கும் எதிரி அதிமுக- பாஜக. எங்களையும் எதிரியாக நினைத்து புறக்கணித்தால் ‘எதிரிக்கு எதிரிக்கு’ நண்பர்களாவார்கள். எவ்வளவு மோசமான எதிரியாக இருந்தாலும் சூழ்நிலை கருதி நண்பர்களாக்கிக் கொள்ளும் வியூகத்தை வகுத்தவர் மகாபாரத அர்ஜூனன் எனவும் பேசினார் அர்ஜூன் ராஜ்.
‘அதிமுக- பாஜக- மதிமுக’ உறவுக்கு சாத்தியமே என்கிற தொனியில் அர்ஜூன் ராஜ் பேசியதால்தான் ரொம்பவே கொந்தளித்தாராம் வைகோ.
சட்டென நாற்காலியை விட்டு எழுந்த வைகோ, “நாங்க ஒரு கூட்டணியை எவ்வளவு கஷ்டப்பட்டு அமைக்கிறோம் என்பது தெரியாமல் பேசுறீங்க. இங்கே அர்ஜூன் ராஜ் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை. மைக் கிடைச்சுட்டா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? அர்ஜூன் ராஜ் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என ஆவேசப்பட்டிருக்கிறார்.
Digital Thinnai Delhi in the background
அர்ஜூன் ராஜ் பற்ற வைத்த நெருப்பை ஊதிப் பெரிதாக்குவது போல அடுத்ததாக மைக் பிடித்த பொருளாளர் செந்திலதிபன், ” நாங்கள் எவனுக்கும் அடிமை இல்லை. குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்போம் என நினைக்காதீங்க. எங்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருந்தால், எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது.
தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள 40 எம்.பிக்களில் துரை வைகோவுக்கு சமமானவன் எவனாவது இருக்கிறானா? எவன் இருக்கிறான்? எவனுமே இல்லையே” என ஒருமையில் விமர்சிக்க, பொதுக்குழுவிலேயே சலசலப்பும் எதிர்ப்பும் எழுந்ததாம்.
இந்த கூட்டம் தொடர்பாக மதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசுகையில், திமுகவால்தான் 29 ஆண்டுகாலம் எம்பியாக இருந்தவர் வைகோ. இந்த நன்றியை மதிமுகவினர் மறந்துவிடக் கூடாது. தற்போதைய அரசியல் சூழலில் திமுகவிடம் இருந்து விலகுவதும் சரியானது அல்ல, இதை புரிந்தும் புரியாமல் சிலர் பேசுகின்றனர் என ஆதங்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக