ராதா மனோகர் : தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தப்பி தவறியும் உண்மை பேசவே மாட்டார்கள்
அவர்கள் பொய் பேசுவதற்கென்றே உருவாக்கப்பட்ட உயிரினங்கள்!
செல்வநாயகம் உருவாக்கிய எந்த மனிதரும் நேர்மையான மனிதராக இல்லவே இல்லை.
தலை முதல் கால்வரை பச்சை பொய்கள் வடித்தெடுத்த சுயநலம் என்றும் குறையாத பேராசை!
செல்வாவின் பக்க விளைவுதான் தமிழ் பயங்கரவாத இயக்கங்களும் அதன் கொடிய தலைவர்களும்.
அல்பிரட் துரையப்பா கொலையும் வட்டுக்கோட்டை தீர்மானமும் ஒரே இலக்கை கொண்ட இரட்டை தாக்குதல்களாகும்.
இந்த இரட்டை தாக்குதல்களின் ஒற்றை காரணம் எம்பி பதவி அமைச்சர் பதவி அதிகார மோகம் புகழ வெளிச்சம் என்பதை தவிர வேறென்ன உண்டு?
திரு அல்பிரட் துரையப்பா அவர்களின் சில படங்களை பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் கொஞ்சம் அலைமோதியது.
இன்றைய யாழ்ப்பாண நிலத்தை அளந்து வீதிகளை உருவாக்கி புகையிலை தோட்டங்கள் உட்பட நிலங்களை அளந்து நிர்மாணம் செய்தது பெரும் பாலும் ஒல்லாந்தர்தான்!
அதனால்தான் நில அளவையாளர்களை உலாந்தாக்கள் என்று கூறும் சொல் வழக்கத்தில் இருந்தது.
ஓல்லாந்தர்கள் என்ற சொல்லே உலாந்தாக்கள் என்று பிற்காலத்தில் மருவியது!
அண்மைய யாழ் நகரத்தின் வளர்ச்சியில் இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் பல நிர்மாணங்கள் திரு அல்பிரட் துரைப்பாவின் பங்களிப்பில்லாமல் நடந்தேறியதில்லை.
அவர் மறைந்த இந்த ஐம்பதாவது ஆண்டில் நாம் இருக்கிறோம்
அந்த மனிதருக்கு தரவேண்டிய உரிய மரியாதையை நாம் இதுவரை வழங்கி இருக்கிறோமா என்றால் இல்லை.
எமது வரலாறு முழுக்க அற்ப பதர்களை போற்றி புகழ்ந்து முள்ளிவாய்க்கால் புதர்களை கண்டதை தவிர வேறு எதை சாதித்திருக்கிறோம்?
கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போமா?
1970 தேர்தலில் தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் தோற்கடிப்பட்டார்
தமிழரசு கட்சியின் சூத்திரதாரி ( எஸ் ஜேவி செல்வாவின் சம்பந்தி)இ எம் வி நாகநாதன் தோற்கடிக்கப்பட்டார்
தமிழரசு கட்சி தலைவர் பட்டிருப்பு எம்பி ராசமாணிக்கம் (மட்டக்களப்பு எம்பி சாணக்கியனின் பாட்டன்) தோற்கடிக்கப்பட்டார்
இவர்களோடு சேர்த்து தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட ஏழு முக்கிய தமிழ் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
குறிப்பாக அமிர்தலிங்கம் நாகநாதன் போன்றோரின் தோல்வியானது தமிழரசு கட்சியின் அரசியல் இருப்பை கேள்வி குறியாக்கி விட்டது
தமிழரசு கட்சியின் அதிலிருந்து மீள்வதற்கு வி நவரத்தினத்தின் சுயாட்சி கழகத்தின் தனித்தமிழ் நாட்டு கோரிக்கையை களவாடிக்கொண்டு புதிய அரசியல் அவதாரம் எடுத்திருந்தனர்.
அந்த தனிநாட்டு கோரிக்கையை வலுப்படுத்த திரு அல்பிரட் துரையப்பாவை கொலை செய்வது என்று முடிவெடுத்தனர் .
யோகேஸ்வரன்( முன்னாள் எம்பி) தலைமையில் பிரபாகரன் உட்பட சில இளைஞர்கள் ரகசிய கூட்டங்களை நடத்தி அந்த நாசத்திற்கு பாதை அமைத்தனர்
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் தேதி பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்
அதை கொண்டாடும் முகமாக 1976 மே 14 ம் தேதி வட்டுக்கோட்டையில் தனி நாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தனிநாட்டு கோரிக்கையை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட எந்த தமிழ் அரசியல்வாதியும் சீரியஸாக எடுத்து கொள்ளவே இல்லை .
அதை ஒரு தேர்தல் தந்திரமாக மட்டுமே கருதினார்கள்
1970 தேர்தலில் கோட்டை விட்ட தொகுதிகளை மீள கைப்பற்றும் தந்திரமாகவே அதை அரங்கேற்றினர்
அதிலும் திரு யோகேஸ்வரன் அல்பிரட் துரையப்பாவை கொன்றதன் மூலாம் யாழ்ப்பாண தொகுதிகு லைன் கிளியர் பண்ணி இருந்தார்
மொத்தத்தில் அந்த வரலாற்று முக்கியத்துவும் வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாடும் தீர்மானமும் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறவே பயன்பட்டது
இக்கட்டுரை திரு அல்பிரட் துரையப்பாவின் ஐம்பது ஆண்டு நினைவு நிகழ்வின் தொடராகும் . மேலும் வரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக