மின்னம்பலம் - Selvam : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 21) காலமானார். அவருக்கு வயது 60.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமுல் கந்தசாமி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கேன்சர் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி காலமானார். அவரது மறைவு அதிமுக நிர்வாகிகள் மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக