Deenadayalan Jagadeesan : விஜயை குண்டுக்கட்டா நெய்வேலில இருந்து சென்னைக்கு தூக்கினு வந்து ரெய்ட் அடிச்சவன் தான், இப்ப கட்சில சேர்ந்திருக்கான்னு வீடியோ சுத்திட்டு இருந்ததில்லையா?
வீடியோ அவ்ளோ க்ளாரிட்டி இல்லாததால,
இது உண்மையான செய்திதானான்னு தேடிப் பார்ப்போம்ன்னு போனா, தம்பியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது.
![]() |
மொத விஷயம், விஜயை ரெய்ட் அடிச்சப்போ தம்பி தான் வருமான வரித்துறை ஜாயின்ட் கமிஷனர். நீங்க உத்திரவாதமா எடுத்துக்கலாம்.
இந்த கூகுள் தேடலில், தம்பி மொக்கையா blogs எழுதும் பழக்கம் உடையவர் என்பதும் தெரிந்தது..
அத்தனை blogsஸையும் முழுசா ஒக்காந்து படிச்சேன்🥲😂..
அதில் அவர் உதிர்த்து வைத்த முத்துகள்…. இதோ..
நூறு நாள் வேலைவாய்ப்பு நாட்டுக்குக் கேடு…
இலவசங்கள் ஒழிக்கப்படணும்..
பிரதமர் எம்பிக்களால் தேர்ந்தெடுப்படணும், ஆனால் முதல்வர் ஜனாதிபதி தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படணும்.
அது வந்து ஊழலை ஒழிக்க உதவுமாம். எனக்கெட்டிய அறிவுக்கு எப்டி யோசித்துப் பார்த்தாலும் அது எப்படி ஊழலை ஒழிக்கும்ன்னு தெரியல..
நேத்தே இதையெல்லாம் எழுதலாம்ன்னு நெனச்சேன். கொஞ்சம் வேலை வந்தது.
அதற்குள்ள அவசரம், இந்த தம்பியே விகடனுக்குப் பேட்டி கொடுத்து, நான் தற்குறி, நான் தற்குறின்னு அடிச்சி சொல்லிட்டாப்பல..
இந்த முதல்வரை ப்ரெசிடென்ஷியல் முறையில் தேர்ந்தெடுக்கணும்ன்னு எழுதின blogக்கு தம்பி வைத்த தலைப்பு என்ன தெரியுமா - innovative solution for a better India.
Blogஸை இவர் என்னப் பெயர்ல எழுதிக் கொண்டிருந்தார் தெரியுமா - “அருண்ஜி ஸ்பீக்ஸ்”.
மோடிஜீ மாதிரி அருண்ஜீன்னு தனக்குத் தானே ஜீ என்ற பெயரையும் வைத்துக்கொண்டார்.
இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்..
2021 தேர்தல் நேரத்தில் சில ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையர் பிரசாந்த் ஶ்ரீவஸ்தவாவால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு,
அதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையரே, இவனை உடனடியாக வருமான வரித்துறையிலிருந்து, CBDT (Central board of direct taxes) எடுத்துக் கொள்ள வேண்டும். மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்ற கன்பர்மேஷனும் தனக்கு வேண்டும் என்று CBDT டைரெக்டருக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
அத்தனை முன்னணிப் பத்திரிக்கைகளிலும் செய்தி அப்போது வந்திருக்கிறது. எதனால் அந்த disciplinary action என்ற விஷயத்தை பத்திரிக்கைகள் வெளியிடவில்லை.
பணமதிப்பிழப்பு சமயத்தில் சேகர் ரெட்டி வீட்டில் கட்டுக்கட்டாக 2000 நூபாய் நோட்டுகள், பல கிலோ தங்கங்கள் எடுக்கப்பட்டதல்லவா?
அந்த கேஸை சிறப்பா ஹேண்டில் பண்ணி ஊத்தி மூடியதும் இவன் தான்..
இவன் தற்குறியான்னெல்லாம் டவுட் படத்தேவையில்லை. அக்மார்க் தற்குறி சங்கி…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக