minnambalam.com - christopher : உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாடுகளுக்கு பிறகு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாட்டைச் சேர்ந்த தலைவர்கள் துருக்கியில் இன்று (ஜூன் 2) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். is russia ukraine peace talks will lead ceasfire
வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்கும், அதன் அண்டை நாடான உக்ரைன் நாட்டிற்கும் இடையே கடந்த 2022ஆம் தேதி போர் தொடங்கியது. மூன்றாடுகளுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் இடையே தீவிர தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இரு நாடுகளும் போரை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ரஷ்யா – உக்ரைன் தாக்குதல்!
இந்த நிலையில் நேற்று ட்ரோன் மூலம் ரஷ்யாவிற்குள் ஊடுருவி, வெவ்வேறு பகுதியில் உள்ள நான்கு இராணுவ விமான நிலையங்களில் 40 க்கும் மேற்பட்ட போர்விமானங்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவத்தின் பாதுகாப்பு சேவை (SBU) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ரஷ்யாவிற்கு சுமார் 7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், ஐந்து பிராந்தியங்கள் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், நோர்வேயின் எல்லைக்கு அருகில் மற்றும் சைபீரியாவில் உள்ள இரண்டு தளங்களில் பல விமானங்கள் தீப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 76 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், ’உக்ரைனில் உள்ள ஒரு இராணுவ பயிற்சி தளத்தில் ரஷ்ய தாக்குதல் நடத்தி, சுமார் 12 வீரர்களைக் கொன்றதற்கு பழிக்குபழியாகத் தான், நமது நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி முற்றிலும் அற்புதமான விளைவை ஏற்படுத்தியது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டு காலத்தில் நேற்று தான் ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை ஏவியதாகவும் உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமா?
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உதவியாளரான விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு துருக்கி வந்துள்ளது. அதே போன்று, பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு இஸ்தான்புல் வந்துள்ளது.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு, துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தலைமை தாங்குவார் என்றும், துருக்கிய உளவுத்துறை அமைப்பின் அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நடந்து வரும் போர் தாக்குதல்கள், இரு நாட்டுக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட போவதில்லை என்பதன் அறிகுறி என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக