செவ்வாய், 27 மே, 2025

வேடன் - Bob Marleyலியும் Che Guveraராவும் Michael jackson னும் ஒன்றாக கலந்த Medleyதான் வேடன்

 ராதா மனோகர் : கேரளா வேடன் வெறும் சத்தங்களை வைத்து கூட்டத்தை கட்டி போடும் ஒரு பாடகன் மட்டுமல்ல!
சத்தங்களை  தாண்டி சத்தம் போடாமல் கேரள மண்ணில் பெரும் நிலநடுக்கத்தை உண்டாக்கி வருகிறார்!
பல போலி உணர்வு ராப் பாடகர்கள் நம்மிடையே பலருண்டு
வேடனுக்கு எதிராக அந்த சக்திகள் உக்கிரமாக போர் தொடுத்துள்ளன.
தாய்லந்தில் இருந்து யாரோ ஒரு நண்பன் வாங்கி கொடுத்த புலிப்பல் வனத்துறையின் சட்டத்தை மீறியதாக வேடன் மீது வழக்கு
முழுபுலியையும் யானையையும் வெட்டி தோலும் தந்ததும் வைத்திருக்கும் நம்பூதிரிகளும் நாயர்களும் பிடிபட்டால் சத்தம் போடாமல் அந்த கொடும் சட்டங்களில் இருந்து தப்பி விடுவது ஒன்றும் அதிசயம் அல்ல.
வெறும் ஐந்து கிராம் கஞ்சா வைத்திருந்தார் என்று இன்னொரு வழக்கு
காண்டெயினர் கணக்கில் ஹீரோயின் கடத்துவோர்கள் இருக்கும் நாட்டில் வெறும் ஐந்து கிராம் கஞ்சா பெரிதாக போய்விட்டது
கஞ்சாவும் புலிப்பல்லும் அல்ல பிரச்சனை   
 நான் பாணன் அல்ல புலாயன் அல்ல பறையன் அல்ல நீ தம்புரானும் அல்ல ஆளேதும் ஒரு மயிரும் அல்ல
இனியும் காத்திருக்க காலமில்ல


காத்திருக்கான் ஆகுமல்ல
பொறுத்து போக்குவான் சமயமில்லா
என்னிக்கு  வேண்டதோ என்னிக்கு அல்ல
ஞாங்களுக்கு வேண்டதோ நீ தரன் மடிக்குமல்ல
இப்படியான தீப்பொறி வரிகள்தான்  அவர்களுக்கு பிரச்சனை
வேடன் எங்கோ ஒரு மூலையில் இவரை ஓங்கி  குரல் எடுத்து பாடிக்கொண்டால் கூட அவர்கள் கடந்து போயிருப்பார்கள்
ஆனால் வேடனின் குரலுக்கு மக்கள் கூடவே நின்று ரிபீட்டு அடிக்கிறார்களே
தங்களை மறைந்து அந்த வரிகளை மீட்டுருவாக்கி பாடுகிறார்களே
கூடவே தங்களை மறந்து ஆடுகிறார்களே
வேடன் இருமினாலும் தும்மினாலும் அது கூட அவர்களுக்கு சங்கீதமாக கேட்கிறது.
ஏன் இந்த ஈர்ப்பு?
நூறாண்டுகளாக  ஏராளமான காயங்களோடு வாழ்ந்து மடிந்து போய்க்கொண்டிருந்த மனிதர்கள் தங்களின்  வேதனைகளை ஓங்கி   உலகுக்கு இவன் சொல்கிறான் என்று கருதுகிறார்கள்
உலகின் உடைந்து போன மனிதர்களின் அத்தனை அவலங்களையும் இவன்  நெஞ்சின் அடியில் தேக்கி வைத்து பாடுவது போல அவர்கள் உணர்கிறார்கள்  
இவனது பாட்டுக்களில்  சம்ஸ்கிருத தவிர்ந்த பழந்தமிழ் சொற்கள் அல்லவா பெரிதும் ஒலிக்கிறது !
சம்ஸ்கிருத கலப்பால் உருவான மலையாள மொழியில் இருந்து ,
மெதுவாக ஆனால உறுதியாக பழந்தமிழ் வேர்களையும் இவனது பாடல்கள் வெளியே கொண்டு வருகிறது!  
இந்த காணொளியில் உள்ள பேட்டி வேடனை பற்றிய பல நுட்பமான செய்திகளை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக