சனி, 31 மே, 2025

இலங்கை உள்நாட்டு தொழில்துறை ஏன் உருப்படவில்லை?

ராதா மனோகர் : இலங்கையின் உள்நாட்டு தொழில்துறை ஏன் உருப்படவில்லை? இலங்கையில் உள்நாட்டு உற்பத்தி பற்றி பேசுவோர்களையே எதிரிகள் போல கருதும் ஒரு கூட்டம் இருக்கிறது
இது மிகப்பெரிய கூடடம்
மத்தியகிழக்கில் அம்மாக்களும் சகோதரிகளும் மகள்மார்களும் உழைத்து கொண்டுவரும் அந்நியச்செலாவணி
உலகம் முழுவதும் குடும்பத்தை பிரிந்து மண்ணை பிரிந்து இன்னும் சொல்லொணா துயரங்களை சுமந்து உழைத்து நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி
தேயிலை மலைகளின் முகடுகளில் முட்டி மோதி வாழ்வை தொலைத்து நாட்டுக்கு கொண்டுவரும் அந்நிய செலாவணி
இவைற்றை தாண்டி இலங்கைக்கு வரும் உல்லாச பிரயாணிகள் கொண்டு வரும் அந்நியச்செலாவணி
இப்படியாக நாட்டுக்குள் வரும் அந்நிய செலாவணியை கொள்ளை அடிக்கும் கூட்டம் .. பெரிய கூட்டம்
இது அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான கூட்டம்
இவர்கள்தான் உள்நாட்டு உற்பத்தி என்ற சொல்லை கேட்டாலே வேப்பங்காயாக கருதுகிறார்கள்
இவர்கள்தான் நாட்டின் பெரிய கொள்ளைக்காரர்கள்
உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியை வெளிநாட்டு பொருட்கள் மூலம் போட்டி போட்டுகொண்டு அழிக்கும் மாபியா கும்பல் இது
எந்த ஆட்சி வந்தாலும் இந்த இறக்குமதியாளர்கள் என்கின்ற வழிப்பறி கொள்ளைக்காரர்களிடம் இருந்து இலங்கை பொருளாதாரத்திற்கு விடிவே கிடையாது!


இந்த கொள்ளையர்கள் நாட்டின் அந்நிய செலாவணியை கொண்டு அளவு கணக்கிலெல்லாமல் ஆடம்பர பொருட்களை கூட இறக்குமதி செய்து பணம் பார்த்து விடுவார்கள் 
பின்பு அந்நிய செலாவணி இல்லை இல்லை என்று ஓலம் பாடிக்கொண்டு  உலகம் முழுவதும் கொடுவட்டிக்கு பணம் கடனாக கேட்டு அலைவார்கள் 
அதற்கு உரிய வட்டியையும் பின்பு மத்திய கிழக்கு பணிப்பெண்களை புலம் பெயர் உழைப்பாளிகளுக்கு கொழுந்து பறிக்கும் அம்மாமாரும்தான் செலுத்த வேண்டும் 
இறக்குமதியாளர்கள் என்ற கொள்ளை கோஷ்டியும் அரசியவாதிகள் என்ற வியாதிகளும் சேர்ந்து நடந்து அக்கிரமம் இது! 
வெறும் முட்டையும் உப்பும் மட்டுமல்ல எதிர்காலத்தில் குடி தண்ணீர் கூட இறக்குமதி செய்வார்கள் இருந்து பாருங்கள் இது வெறும் வேடிக்கை அல்ல
உலக புகழ் பெற்ற பிராண்ட் தண்ணீர் என்று விற்பார்கள்
அதை அதிக பணம் கொடுத்து வாங்க பல கூமுட்டைகளும் கொள்ளை கோஷ்டிகளும் தயாராகவே இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக