![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : இலங்கை தமிழர்கள் புலர்ந்த நாடுகளில் இதுவரை ஆறு பெண்கள் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளார்கள்
நிச்சயமாக இந்த வெற்றிகள் நாம் கொண்டாட கூடிய விடயம்தான்.
புலம்பெயர் இலங்கை தமிழர் வாழும் நாடுகளில் ஆண்கள்தான் அதிகமான அளவில் அந்தந்த நாட்டு தேர்தல்களில் அதிகம் பங்கு போற்றுகிறார்கள்
ஆனால் அவர்கள் ஏன் பெண்களை போல வெற்றிகளை பெறுவதில்லை?
(ஒரே ஒரு ஹரி ஆனந்தசங்கரி மட்டுமே விதிவிலக்கு . அதுவும் அவரின் தந்தையின் செல்வாக்கு மற்றும் புலி மாபியாவின் பக்கபலம் என்றும் கூறப்படுகிறது)
தாங்கள் புலம் பெயர்ந்த நாட்டின் அரசியல் சமூக சிந்தனை மற்றும் அந்நாடுகளின் வரலாறு போன்றவற்றில் உள்ள புரிந்துணர்வுதான் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்
புலம் பெயர் நாடுகளில் வாழும் வாய்ப்பை பெற்ற அரசியல் ஆண்கள் இனியாவது கொஞ்சம் விசாலமான அரசியல் பார்வையை வளர்த்து கொள்ளவேண்டும்
இல்லையேல் காலம் உங்களை மறந்து விட்டு முன்னே சென்று கொண்டிருக்கும்
இனியும் புலிப்பாணி அரசியல் கைகொடுக்கும் என்று கருதினால் உங்கள் பெண்களே உங்களை விட்டு முன்னேறி சென்று விடுவார்கள் என்று தோன்றுகிறது
இதோ நமது பெருமைக்கு உரிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல்
ராதிகா சித்சபேசன் கனடா
கம்சி குணரத்தினம் நோர்வே
வருஷி வால்டேர் நியூ சிலாந்து
உமா குமரன் இங்கிலாந்து
ஜுவனிதா நாதன் கனடா
அஷ்வினி அம்பிகைபாகர் ஆஸ்திரேலியா






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக