![]() |
S T Nalini Ratnarajah : பாகிஸ்தான் இந்தியா முரண்பாடாகட்டும் இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை ஆகட்டும் வரலாறை சொல்லிச் சொல்லி வெறுப்பையும் வன்முறையும் எதிர்ப்பையும் ஊக்குவிக்கும் கருவிகளாகத்தான் ஆண்கள் பயன்படுகின்றீர்கள்.
தற்போதைய சூழலில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் இருக்கும் பெண்கள் படம் துயரங்களை கஷ்டங்களை ஆண்கள் தன் கண்களின் ஊடாக பார்க்க தவறுகின்றீர்கள்
போர், பயங்கரவாதம் மற்றும் பெண்களின் மீது அதன் தாக்கம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள், "தேசிய பாதுகாப்பு" என்ற கொள்கையின் பெயரில், தொடர்ந்து போர்களிலும் பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த போரின் எதிர்வினை பெரும்பாலும் பேசப்படாத பரிதாபங்களை உருவாக்குகிறது — குறிப்பாக பெண்களின் மீது மற்றும் சிறுவர்களின் மீதும்.
போர் அல்லது பயங்கரவாதம் ஏற்படும் போதும், முதலில் ஆயுத உற்பத்தி அதிகரிக்கின்றது, ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறது, ஆயுதத்தை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது மற்றும் கடுமையான வன்முறைகள் வெடிக்கின்றன. வீரர்கள் (பொதுவாக ஆண்கள்) போரில் உயிரிழக்கின்றனர் அல்லது உடல் ஊனமடைந்து திரும்புகின்றனர் அல்லது காணாமல் போகின்றார்கள்.
ஆனால் அவர்களது உயிரிழப்பு அல்லது ஊனமடைதல், பின்னால் இருக்கின்ற பெண்களின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுவிடுகின்றது.
பெண்கள் விதவைகளாகும்; கைகால் இழந்த ஆண்களின் துணைவியராய் அல்லது பராமரிக்க வேண்டிய தாயாக, மகளாக, கடும் பொருளாதாரச் சுமையுடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் இழக்கின்றனர்; சமூக அடையாளமும் மரியாதையும் இழக்கின்றனர்.
மனஅழுத்தம், வறுமை, மற்றும் பாலியல் மற்றும் வேறு வடிவ வன்முறைகளுக்கு அதிகமாகக் குறிவைக்கப்படுகின்றனர்.
ஆகவே, போரும் பயங்கரவாதமும் நாடுகள் மற்றும் தேசங்களின் பெயரில் நடத்தப்படும் போதிலும், அதன் மைய பாதிப்புகளை சுமந்து தாங்குவதற்கு பெண்களே முக்கியமாக பாதிக்கப்படுகின்றன.
இந்த ராணுவ அமைப்புகள், போர் இயந்திரங்கள், ஆயுத உற்பத்தி மற்றும் பயன்பாடு அனைத்தும் ஆணாதிக்கக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளே ஆகும். ஆண் என்பவன் பாதுகாக்க வேண்டியவன் என்ற கருப்பொருளில் தேசத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆண்களின் தலையிலே கட்டப்படுகிறது.
இதற்காக தாய்நாடு பாரதமாதா என்று நாட்டுக்கு பெண்ணை உவமையாக சொல்கிறார்கள்.
இவை எல்லாம் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெண்களை இன்னும் பின் தள்ளும் வன்முறைக் கருவிகளாக செயல்படுகின்றன என்பதை உண்மையில் தேசத்தை நேசிக்கும் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சமாதான சூழலை உருவாக்குவது நோக்கமாக இருக்க வேண்டும்.
பி கு: தெற்காசியா மனித வளத்திலும் இயற்கை வளத்திலும் உலகத்திலேயே முதல் இடம் பெறுகிறது இவர்களை விட்டால் வளர்ந்து விடுவார்கள் என்று பயத்தில் யுகாதிபத்திய நாடுகள் உருவாக்கி இருக்கும் பிரச்சனை தான் எங்களுடைய முரண்பாடு என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக