வியாழன், 2 ஜனவரி, 2025

16 மாநக​ராட்​சிகள் 13 நகராட்​சிகள், 25 பேரூராட்​சிகள் உருவாக்கம்

 Hindu Tamil : சென்னை: நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்​தலைக் கருத்​தில் கொண்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநக​ராட்​சிகள், 41 நகராட்​சிகள் விரிவாக்​கம், கன்னி​யாகுமரி உள்ளிட்ட 13 நகராட்​சிகள், 25 பேரூராட்​சிகள் உருவாக்கம் மற்றும் மறு சீரமைப்​புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: கடந்த 2011 மக்கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலை​யில், தற்போது மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்​துள்ளது.
எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமய​மாக்கலைக் கருத்​தில்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்​டியதன் அவசியம் எழுகிறது.



நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு​களுடன் இதர உள்ளாட்​சிப் பகுதிகள் இணைக்​கப்​படும்​போது அனைத்து பகுதி​களி​லும் குடி​யிருக்​கும் பொது​மக்​களின் வாழ்க்கைத் தரம் உயர்​வதுடன், அடிப்படை வசதி​கள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்​படுத்​தப்​பட்ட சுகா​தாரம் மற்றும் மருத்துவ வசதி​களும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும்.

இம்மேம்​பாட்​டி​னால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழில​கங்கள் ஏற்பட​வும், வேலை​வாய்ப்பு உருவாக​வும், வருவாய் பெரு​க​வும், அனைத்து தரப்பு வளர்ச்​சிக்​கும் ஏதுவாகும்.

கடந்த 2021-ம் ஆண்டு 6 புதிய மாநக​ராட்​சிகள் மற்றும் 28 நகராட்​சிகள் உருவாக்​கப்​பட்​டுள்ளன. அதேபோல் கடந்த ஆக.10-ம் தேதி திரு​வண்ணா​மலை, நாமக்​கல், காரைக்​குடி மற்றும் புதுக்​கோட்டை ஆகிய 4 மாநக​ராட்​சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்​சிகள் மற்றும் 46 ஊராட்​சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடை முறை​களைப் பின்​பற்றி மாநக​ராட்​சிகளாக அமைத்​துரு​வாக்கி​யுள்​ளது.

மேலும், ஆக.12-ம் தேதி மாமல்​லபுரம், பெரும்​புதூர் மற்றும் திரு​வை​யாறு ஆகிய பேரூராட்​சிகளை நகராட்​சியாக அமைத்​துரு​வாக்க உத்தேச முடிவினை அறிவித்து அரசாணைகள் வெளி​யிடப்​பட்​டுள்ளன.

இந்நிலை​யில், உள்ளாட்​சிப் பகுதி​களின் எதிர்கால வளர்ச்​சிக்கான தேவைகள் ஆகிய​வற்​றைக் கருத்​தில்​கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்பு​களின் மறுசீரமைப்பை மேற்​கொள்​வதென முடிவு செய்​துள்ளது.

தற்போது, 28 மாவட்​டங்​களில் உள்ள கிராம ஊராட்​சிகளில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிரதி​நி​தி​களின் பதவிக்​காலம் ஜன.5-ம் தேதி நிறைவடைகிறது. இந்த மாவட்​டங்​களில் உள்ள நகர்ப்பு​றத்​தன்மை வாய்ந்த ஊராட்​சிகளை அருகிலுள்ள மாநக​ராட்​சிகள், நகராட்​சிகளுடன் இணைக்​க​வும் பேரூராட்​சிகள் மற்றும் கிராம ஊராட்​சிகளை இணைத்து நகராட்​சியாக அமைத்​துரு​வாக்கம் செய்​ய​வும் செயற்​குறிப்புகள் பெறப்​பட்​டுள்ளன.

இச்செயற்​குறிப்புகளை அரசு பரிசீலித்து, பெருநகர சென்னை மாநக​ராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநக​ராட்​சிகளு​டன், 4 நகராட்​சிகள், 5 பேரூராட்​சிகள் மற்றும் 149 ஊராட்​சிகளை இணைக்​க​வும், திரு​வாரூர், திரு​வள்​ளுர், சிதம்​பரம் உள்ளிட்ட 41 நகராட்​சிகளுடன் 147 ஊராட்​சிகள் மற்றும் 1 பேரூராட்​சியை இணைக்க​வும், பேரூராட்​சிகளுடன் ஊராட்​சிகளை இணைத்​தும், தனித்​தும் கன்னி​யாகுமரி, அரூர், பெருந்​துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்​சிகளை அமைத்​துரு​வாக்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், கிராம ஊராட்​சிகளை இணைத்தும் தனியாக​வும் ஏற்காடு, காளை​யார்​கோ​வில், திரு​மயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்​சிகளை அமைத்​துரு​வாக்​க​வும், 29 கிராம ஊராட்​சி களை 25 பேரூராட்​சிகளுடன் இணைக்​க​வும் உத்தேச முடி​வினை மேற்​கொண்​டுள்​ளது. இது தொடர்பாக தக்க சட்ட​முறை​களின் கீழ் உத்தர​வுகள் வெளி​யிடப்​பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்​கப்​பட்​டுள்ளன.

இந்நட​வடிக்கை​யின் மூலம் பொது​மக்​களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்​டமைப்பு வசதிகளை அளிக்​கும் நோக்​கத்தை சிறப்பான முறை​யில் எட்ட முடி​யும். மேலும், உட்கட்​டமைப்பு வசதி மேம்​பாட்டுக்கான ஒட்டுமொத்த திட்​ட​மிடு​தல், இடம்​சார்ந்த திட்​ட​மிடல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்​கிணைத்தல் அல்லது திறம்பட செயலாக்​குதல் மூலம் திட்​ட​மிடப்​பட்ட நகர்ப்புற வளர்ச்​சியை நெறி​முறைப்​படுத்​த​வும் ஏதுவாகும்.

நகர்ப்புற உள்​ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்​பின் ​முக்​கி​யத்து​வத்தை கருத்​தில் ​கொண்​டுள்ள தமிழக அரசு, ​முதல்​வர் ​மு.க.ஸ்​டா​லின் உத்தரவின்பேரில் 5 அரசாணைகளை வெளி​யிட்​டுள்​ளது. இவை அரசின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்டுள்ளன. இவ்​வாறு அ​தில் கூறப்​பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக