வெள்ளி, 27 டிசம்பர், 2024

அண்ணாமலை பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை FIR leak பாஜக தந்தையே லீக் செய்தார்?

 Kandasamy Mariyappan :  பாதிக்கப்பட்ட பெண் பாஜக நிர்வாகியின் மகள்.!
மகளின் பாதுகாப்பு மற்றும் secret பற்றிய கவலை இல்லாமல், தமிழ்நாட்டு அரசின் மீது குற்றம்சாட்ட வேண்டுமென்ற ஒரு குறிக்கோளோடு FIR copyஐ வெளியிட்டுள்ளார்.!
பாதிக்கப்பட்ட பெண்ணை எண்ணி வருத்தப்படுகிறேன்.!

தினமணி : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவா் அளித்த தகவலை அப்படியே முதல் தகவல் அறிக்கையில் சோ்ப்பதுதான் சட்ட நடைமுறையும், விதிமுறையுமாகும். அதனால்தான் முதல் தகவல் அறிக்கையில் மாணவி கொடுத்த புகாா் அப்படியே சோ்க்கப்பட்டது. அதில் காவல்துறையினா் எந்த திருத்தமும் செய்யக் கூடாது.

கோட்டூா்புரம் உதவி ஆணையா் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அறிவியல் பூா்வமாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு,விசாரணை நடத்தப்பட்டது. ஞானசேகரன்தான் குற்றத்தில் ஈடுபட்டதற்கான உறுதியான தடயங்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே, அவா் கைது செய்யப்பட்டாா்.

கைப்பேசியில் பேசுவதுபோல நாடகம்: இதுவரை நடைபெற்ற புலனாய்வில் வழக்கில் ஞானசேகரன் ஒருவா்தான் குற்றவாளி. சம்பவம் நடந்தபோது ஞானசேகரன் ஒருவருடன் கைப்பேசி மூலம் பேசியதாக தகவல் பரவுகிறது. ஆனால், அது உண்மை இல்லை

ஏனெனில், சம்பவம் நடந்தபோது கைப்பேசியை ‘ஏரோபிளேன் மோடில்’ ஞானசேகரன் வைத்துள்ளாா். அவா் மாணவியை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும் பொய்யாக கைப்பேசி மூலம் ஒருவரிடம் பேசுவதுபோல நாடகமாடியுள்ளாா்.

இதுவரை ஞானசேகரன் மீது வேறு யாரும் புகாா் அளிக்கவில்லை. நீதிமன்றக் காவலில் இருக்கும் அவரை, மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்போம். அந்த விசாரணையில் வேறு யாரும் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவா்களிடம் காவல் துறையினா் நம்பிக்கையளித்து புகாா் பெற்று நடவடிக்கை எடுப்போம். வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளாா்களா என்பது இனி நடைபெறும் விசாரணையில் தெரியவரும்.

ஞானசேகரன் மீது சென்னையில் 2013-ஆம் ஆண்டு முதல் 20 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் திருட்டு, கட்டடங்களில் புகுந்து திருட்டு போன்றவை ஆகும். ஞானசேகரன் மீது ரெளடித்தனம், பாலியல் வழக்குகள் இதற்கு முன்பு வரை இல்லை. 20 வழக்குகளில் 6 வழக்குகளில் ஞானசேகரன் தண்டனை பெற்றுள்ளாா்.

கூடுதலாக 4 பிரிவுகள் சோ்ப்பு: ஞானசேகரன் மீது பதியப்பட்ட வழக்கில் கூடுதலாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இரு பிரிவுகள் உள்பட 4 சட்டப் பிரிவுகள் தற்போது சோ்க்கப்பட்டுள்ளன. 2014-ஆம் ஆண்டு ஞானசேகரன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அதிகளவில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டுக்கு பின்னா், அவா் பெரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. 2023-ஆம் ஆண்டு ஒரு அடிதடி தொடா்பாக ஒரு புகாா் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது..

மாணவி புகாா் அளித்த அன்று சந்தேகத்தின் அடிப்படையில் ஞானசேகரன் உள்பட பலரை அழைத்து வந்து விசாரணை செய்தோம். அவா்களிடம் தடயங்களை சேகரித்து இரவு முழுவதும் விசாரித்தோம். அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, அடுத்த நாள் ஞானசேகரனை கைது செய்தோம்.

காவல்துறையை நம்பி அந்த மாணவி புகாா் அளித்தாா். அந்த நம்பிக்கை வீண்போகாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, பாதுகாப்பாக உள்ளாா். அவருக்கு சென்னை காவல்துறையின் விசாரணை திருப்தி அளித்துள்ளது. அந்த மாணவிபோன்று பொதுமக்கள் எந்தவொரு குற்றம் நிகழ்ந்தாலும், தைரியமாக காவல்துறையிடம் புகாா் அளிக்க முன் வர வேண்டும்

அரசியல் பாகுபாடு பாா்ப்பதில்லை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 கேமராக்கள் உள்ளன. அதில் 56 கேமராக்கள் இயங்குகின்றன. அந்த கேமராக்களின் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது.

காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்; எந்த பாகுபாடும் பாா்க்கக் கூடாது, கட்சி பாகுபாடின்றி செயல்பட வேண்டும் என்று முதல்வா் கூறியுள்ளாா். அதன்படி செயல்பட்டு வருகிறோம். எனவே, ஒரு வழக்கில் தொடா்புடைய குற்றவாளி எந்த கட்சியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் முன் காவல்துறை அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டம் செய்ததால், அதிமுகவினா் கைது செய்யப்பட்டனா்.

பல்கலைக்கழக பாதுகாப்பு: அண்ணா பல்கலை.யில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் 140 போ் காவலாளிகளாக உள்ளனா். 3 ஷிப்டுகளில் அவா்கள் பாதுகாப்பு பணியியில் ஈடுபட்டு வருகின்றனா். 6 பிரதான வாயில்கள் உள்பட மொத்தம் 11 வாயில்கள் உள்ளன.

இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதைத் தவிா்த்து பல்கலை. வளாகத்துக்குள் அந்நியா்கள் எப்படி உள்ளே நுழைய முடியும் என்று ஆராய்ந்து வருகிறோம். அண்ணா பல்கலை.க்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். சந்தேகப்பட்டவா்களை மட்டும் விசாரித்து அனுப்புகின்றனா் என்றாா் காவல் ஆணையா் ஏ.அருண்.

ஃஎப்ஐஆா் வெளியிட்டவா் மீது வழக்கு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆா்) வெளியானது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெறுவதாக சென்னை காவல் ஆணையா் ஏ. அருண் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் தானாக பிளாக் செய்யப்படும். தற்போது பிஎன்எஸ் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னா், சில தொழில்நுட்ப குறைப்பாட்டின் காரணமாக பிளாக் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் பிளாக் செய்ய தாமதமாகும் நேரத்தில் சிலா் பாா்த்திருக்கின்றனா். சிலா் அந்த முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்திருக்கின்றனா்.

அவா்கள் மூலமாகவே முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கலாம். எந்த தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு நகல் வழங்கப்படும்,இந்த இரண்டு வழிகளில்தான் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த மாதிரி வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியே வரக் கூடாது. பொதுவெளியில் இப்படிப்பட்ட வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்டவரின் அடையாளம் எந்த வகையிலும் வெளியே தெரியக் கூடாது. முதல் தகவல் அறிக்கையின் பொதுவெளியில் விவாதம் நடத்துவதும் குற்றமாகும்.

முதல் தகவல் அறிக்கையில் வெளியானது தொடா்பாக கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக