வியாழன், 12 டிசம்பர், 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

 மின்னம்பலம் - Kavi : ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து தனது அறிக்கையை மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன.

2029 தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக