வியாழன், 26 டிசம்பர், 2024

பிரம்மபுத்திரா நதியில் கட்ட சீனா திட்டம்! உலகின் மிகப்பெரிய அணை

 dinamalar.com- திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து,
வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது.
உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் மும்மடங்கு பெரிய அணையை பிரம்மபுத்ராவில் கட்ட சீனா திட்டம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.



இந்த அணையைக் கொண்டு, 60 ஆயிரம் மெகாவாட் திறன் மின் உற்பத்தியைச் செய்யலாம் என்பது திட்டம். இந்த மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும். புதிய அணை கட்டுவதன் மூலம், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்கின்றனர் அந்நாட்டு நிபுணர்கள். இந்த அணை, பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக