செவ்வாய், 24 டிசம்பர், 2024

கக்கன் போலியாக கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்து .....

May be an image of 1 person

 Sivakumar Nagarajan  :  கலைஞரும் தமிழ்நாடும் தமிழர்களும் கக்கனுக்கு செய்த துரோகத்தை பார்த்தீங்களா ப்ரோ???
கக்கனை போல வருமா? கக்கனை தோற்கடித்த தமிழ்நாடு! என்ற உலகமகா உருட்டை தமிழ்நாடு அரசியல் வரலாறு அறியாத WhatsApp காலத்து நண்பர்கள் பலர் படித்திருப்பீர்கள்.
25-01-1965 முதல் 12-02-1965 வரை 18 நாள் பற்றி எரிந்த இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயானோர் எண்ணிக்கை, 63.
குமாரபாளையம்-15
பொள்ளாச்சி-10
பாண்டிச்சேரி-10
கோவை-4


திருச்செங்கோடு-4
திருப்பூர்-4
கரூர்-3
பேரணாம்பட்டு-3
ஜோலார்ப்பேட்டை-3
திருச்சி-2
திருவொற்றியூர்-2
சென்னை-1
ஆற்காடு-1
சென்னிமலை-1
வெள்ளக்கோவில்-1
இது அதிகாரப்பூர்வ அரசு கணக்கு மட்டுமே!
உண்மைக்கணக்கு இதை விட பன்மடங்கு. பொள்ளாச்சியில் மட்டும் பெண்கள் உட்பட 200 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்போ காவல்துறையை தன்னகத்தே வைத்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு உள்துறை அமைச்சர் நம்ம கக்கன் தான்.
இப்போ சொல்லுங்க கக்கனை போல வருமா?
சரி அதனாலென்ன கக்கனை அப்படியே அம்போ என்று விட்டுவிடவில்லை.
திமுக ஆட்சியில்,
♦ மதுரையில் கக்கன் சிலை
31 ஆகஸ்ட் 1997
♦ தும்பைப்பட்டியில் கக்கன் மணி மண்டபம்,
13 பிப்ரவரி 2001
♦ கக்கன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
10 அக்டோபர், 2009
மகன் திரு.பாக்கியநாதன் வங்கி வைப்பு நிதி கணக்கில் ரூ.1 லட்சம்
பேரன் திரு.கண்ணன் வங்கி வைப்பு நிதி கணக்கில் ரூ.1 லட்சம்
ஆக மகன், பேரன் என்று இருவர் பெயரிலும் Fixed Deposits.
இது தவிர இருவருக்கும் ரூ.25,000/- ரொக்கம் என்று கெட்டப் பையன்  கருணாநிதி வாரியிறைத்தார்.
கக்கனுக்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? என்று கேட்போர் சிலருண்டு.
எக்காலத்திலும் காங்கிரஸ் கட்சி அவர் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
அன்றும் இன்றும் கக்கன் குடும்பம் நல்ல நிலைமையில் தான் இருந்தது, இருக்கிறது. அவரது வாரிசுகள் படித்து முடித்து நல்ல நிலைமையில் தான் இருந்தனர்.
கக்கன் அவர்களின் மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக இருந்தவர்.
அவருக்கு ஐந்து மகன்களும், ஒரு மகளும்.
மூத்த மகன் திரு. பத்மநாதன் அவர்கள் தமிழக கூட்டுறவு துறை பதிவாளர்
மருமகள் மருத்துவ பேராசிரியை
இரண்டாவது மகன் திரு. பாக்கியநாதன் அவர்கள் சென்னையில் புகழ்பெற்ற சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
மூன்றாவது மகன் திரு. காசி விஸ்வநாதன் அவர்கள் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற தமிழக காவல்துறையில் பணிபுரிந்தவர்.
நான்காவது, ஐந்தாவது மகன்கள் இருவரும் மருத்துவர்கள்.
அப்புறம் ஏன் கக்கன் மதுரை அரசு மருத்துவமனையில் அநாதையாக படுத்துக்கிடந்தார் என்று யோசிக்க வேண்டியவங்க யோசிங்க.
A Sivakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக