ஞாயிறு, 24 நவம்பர், 2024

JVP / NPP -அளவு கணக்கில்லாமல் ஊழல் மலிந்தால் .. மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்!

May be an image of 3 people and text

ராதா மனோகர் : அண்மையில் இலங்கையில் மிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) பற்றி பலருக்கும் புரியாத பல விடயங்கள் உள்ளன!
ஏனெனில் ஜேவிபியின் கடந்த கால வரலாறு மிகவும் சர்ச்சைக்கு உரியதாக இருந்தது.
மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி அமைப்பு பற்றியும் தெளிவான புரிதல் இல்லை எனலாம்!
இருந்தாலும் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தார்கள்!
ஏன்?
ஏற்கனவே ஆட்சியில் இருந்த அல்லது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஆளும் கட்சிகளாக்கட்டும் எல்லாமே அளவு கணக்கில்லாமல் சொத்து குவிப்பாளர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.
இந்த அரசியல்வாதிகளின் சொத்து குவிப்புக்கள் நாட்டை ஒரு ஊழல் கிடங்காக மாற்றி விட்டிருந்தது.


இந்த அரசியல்வாதிகளிடையே பல நேர்மையான அரசியல் தலைவர்களும் இருந்தார்கள் என்பதூவும் கூட உண்மைதான்.
ஆனாலும் ஒட்டு மொத்தமாக நாட்டு  நிலைமை கைமீறி போயிருந்தது.
நூறு கோடி ஆயிரம் கோடி என்பவை எல்லாம் மிக சாதாரணமான சொற்களாக மாறிவிட்டிருந்தது.

மறுபுறத்தில் மக்களின் வாழ்வியல் படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு கொண்டிருந்தது.
கல்வி மருத்துவம் அரசியல் உணவு என்று எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஊழல் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது!
இந்த நிலையில் இந்த ஊழல் பெருச்சாளிகளை கொஞ்சமாவது கட்டுப்படுத்த கூடியவர்கள் யார் என்ற கேள்விக்கு,
மக்களின் முன்னால் தெரிந்தவர்கள் அனுரா குமார திசாநாயக்க தலைமையில் இருந்த தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி ) கூட்டணிதான்!
இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை காலம்தான் சரியாக எதிர்வு கூறவேண்டும்!

இந்த வரலாற்று நிகழ்வில் இருந்து எல்லா அரசியல்வாதிகளும் பாடம் கற்கவேண்டும்

என்னதான் கொள்கை கோட்பாடு தேசியம் உணர்வு மொழி அபிமானம் இனப்பற்று எல்லாம் இருந்தாலும்,
 
அளவு கணக்கில்லாமல் ஊழல் மலிந்தால் ..
மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக