வியாழன், 21 நவம்பர், 2024

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கைது பிடி ஆணை! :உலக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

 தினமலர் : லண்டன்: போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 250 பேர் கடத்தப்பட்டனர். இது தொடர்பான போர்க் குற்றங்களுக்காக, மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை கோரப்பட்டிருந்தது. அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர். மற்றொருவரான டொய்ப் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



'இந்நிலையில் காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போருக்காக ஐ.நா., அமைப்பின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், காஸாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்திய நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் டெய்ப் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.


அவர்கள் இருவரும், மனிதர்கள் உயிர் வாழ தேவையான குடிநீர், உணவுப்பொருட்கள் கிடைக்காமல் செய்தும், அப்பாவி மக்கள் வசிக்குமிடம் என்று தெரிந்தே தாக்குதல் நடத்தியும் போர்க்குற்றம் இழைத்துள்ளனர் என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோர் வெளிநாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படலாம். இந்த வழக்கு தொடர்பாக, இஸ்ரேல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக