திங்கள், 18 நவம்பர், 2024

சென்ற நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞான தீர்க்கதரிசி பெரியார்தான் .. ஆர்த்தர் கிளார்க் அல்ல !

No photo description available.

இன்று வளர்ந்த நிலையில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்ப்புக்களை பற்றி 1938 இலேயே தந்தை பெரியார்  தீர்க்க தரிசனமாக கூறியிள்ளார் .
சென்ற  நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞான தீர்க்கதரிசி பெரியார்தான்  .. ஆர்த்தர் கிளார்க் அல்ல !
இனிவரும் உலகம்"* எனும் தலைப்பில் *" சமுதாய விஞ்ஞானி "தந்தை பெரியார்* அவர்கள் 1938 லேயே கூறியது :
போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்!
( flight Metro trains high speed cars and bus)
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்!
(cell phones laptops and tabs)
ரேடியோ ஒவ்வொரு தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்!
( headphones and Bluetooth instruments)
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத் தக்க சவுகரியம் ஏற்படும்!
( WhatsApp and video calling systems)


மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க சாத்தியப்படும்!
( ebook and online coaching centre methods)
உணவுகளுக்கு பயன்படும்படியான உணவு, சத்துப்பொருள்கள் ஆக சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டுவிடும்!
(Steroid foods and Vitamin minerals mixing foods)
மனிதனுடைய ஆயுள் 100 வருஷம் என்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம் இன்னும் மேலே போனாலும் போகலாம்!
( medical department improvement)
பிள்ளைப் பேறுக்கு ஆண்-பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம், நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலி காளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்க்ஷன் மூலம் பெண்கள் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தை பிறக்க செய்யப்படும், ஆண்-பெண் சேர்க்கை குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும் மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக்கூடும்!
( Test tube babies and cloning systems)
இன்னும் 80 ஆண்டுகள் கழித்து இச்சமூக நிலை எப்படியிருக்குமென சரியாக நம்மால் அனுமானிக்க இயலுமா?
அறிவியலும், நாகரிக வளர்ச்சியையும், கல்வியையும் இரண்டாயிரம் ஆண்டுகளாய் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் தலைவன் இச்சமூகத்தை முன்னோக்கிப் பார்த்த பரந்த நோக்கை என்னவென்றுச் சொல்வது?
*"அவர் மண்டை சுரப்பை உலகு தொழும்!"*
என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
இப்போது *உலகம் தொழுகிறது.*
ஆம் தோழர்களே...!
அதனால் தான்
*அவர் பெரியார்.*
மேலும் அறிய...
*"இனி வரும் உலகம்"* என்ற நூலை படியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக