ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் பட்நாவிஸ்?

tamil.oneindia.com  -Shyamsundar  :  மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தற்போது முதல்வராக உள்ள சிவசேனாவின் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அகியோர் போட்டியில் உள்ளனர்.
இதில் ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள். ஆனால் பாஜக கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.இத்தனை ஆண்டுளாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். அவர் மீண்டும் முதல்வராகவே விரும்புவார். அவர் முதல்வர் ஆகும் பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியை முறிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பட்ட குழப்பான சூழலில்தான் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் பாஜக தனிப்பட்ட வகையில் 132 இடங்களை வென்றுள்ளதால்.. பாஜகவே முதல்வர் பதவியை ஏற்க விரும்பும். பாஜக மெஜாரிட்டி பெற 13 இடங்களே போதும். இதனால் ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. அஜித் பவார் ஆதரவுடன் முதல்வராகலாம்.

இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளன. ஷிண்டே முதல்வர் பதவியை இழக்க நேரிடலாம். ஷிண்டே எதிர்த்தால்.. அவரின் கட்சி பிரிவு உடைக்கப்பட்டு வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மீண்டும்.,. கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து தேவேந்திர பட்னாவிஸ் அங்கே முதல்வராகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் கடந்த வாரம் ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா: காங்கிரஸ் 16, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 10 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா: பாஜக கூட்டணி - பாஜக 132 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 31, ஷிண்டே சிவசேனா - 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ள. பாஜக கூட்டணி மொத்தமாக 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் நிலவரம்: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் போட்டியிட்டது
தடைகளை தாண்டிய வெற்றி.. ஹேமந்த் சோரன் உறுதிக்கு வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிட்டது. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிட்டது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் வந்த மோதலில் சிவசேனாவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.

ஆனால் அதன்பின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. அதோடு தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் உடைந்தது. இவர்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவசேனா ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக