ஞாயிறு, 17 நவம்பர், 2024

18,000 தமிழர்களே உள்ள மாத்தறையில் 148370வாக்குகளை சரோஜா பெற்றார்! 53835 வாக்குகளை அக்ரம் இலியாஸ் பெற்றார்

May be an image of 1 person and text
May be an image of 1 person and text
May be an image of 1 person and text

மாத்தறை மாவட்டத்தில் 18,000 தமிழ் வாக்காளர்களே உள்ளனர்!
ஆனால் அங்கு வெற்றி பெற்ற சரோஜா சாவித்திரி பால்றாஜ் அவர்கள் பெற்ற வாக்குகள் 148 370!
சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல - அவர்கள்  திராவிடர்கள்தான்!
Siraj Hakkeem :  சுனில் ஹந்துன்நெதி -  A great man with a broad mind...
கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஹந்துன்நெதி அவர்கள் 37,236 வாக்குகள் பெற்று சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அப்போது NPP எதிரிகள்  அவர் மாத்தறை சந்தியில் வடை விற்பது போன்று ஒரு மீம்ஸ் கிரியட் பண்ணி பரவ விட்டனர். அதற்கு ஹந்துன்நெதி புன்னகையுடன் இது ஒரு நல்ல தொழில் தானே, நான் மத்திய வங்கியை கொள்ளையடிக்க வில்லை என்று பதில் அளித்தார்...


இன்று மாத்தறை மாவட்டத்தில் 249,251 அதிகூடிய விருப்ப வாக்குகள் பெற்று MP யாகி இருக்கிறார். அது மட்டுமல்ல அவரின் தேர்தல் பிரச்சார நெறிப்படுத்தல் காரணமாக
சிங்களவர்
தமிழர்
கிறிஸ்தவர்
முஸ்லிம்
என்று நான்கு பேர் தெரிவாகி இருக்கின்றனர்...
6 இலட்சத்தி 80 ஆயிரம் வாக்குகளை கொண்ட மாத்தறை மாவட்டத்தில் 26,000 முஸ்லிம் வாக்காளர்களும்,
18,000 தமிழ் வாக்காளர்களும் உள்ளனர். இங்கு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இருவர் தேர்வாகி இருக்கின்றனர்...
1-அக்ராம் இல்யாஸ்  53,835
2-சரோஜா போல்ராஜ் 148 370
இவர்கள் இருவரும் அவர்களது இன வாக்கினால் வெற்றி பெற வேண்டும் என்றால் அது சாத்தியமில்லாத விடயம். இங்குதான் ஹந்துன்நெதி மனிதநேய செயற்பாட்டை வெளிகாட்டினார்...
ஹந்துன்நெதி இவர்களை சிங்கள மக்கள் மத்தியில் மார்கெட்டிங் செய்தார். தான் சென்ற பிரச்சார கூட்டத்திற்கெல்லாம் கூட்டிச் சென்றார். சிங்கள கிராமங்கள் தோறும் அழைத்துச் சென்றார். இறுதியில் அவர்களை வெற்றியும் பெற வைத்து விட்டார்...
இதேபோன்று விஜித ஹேரத் அவர்கள் கம்பஹா மாவட்டத்தில் முனீர் முலவ்பர் (நளீமி) அவர்களை ப்ரோமோட் பண்ணி 109,105 வாக்குகள் பெற வைத்தார்...
இப்ப சொல்லுங்கள் இப்படி நமது முஸ்லிம் தலைவர்கள் யாராவது சிங்கள இனத்தவர் ஒருவரை எமது பிரதேசத்தில் கூட்டி வந்து வாக்கு கேட்டால் நாம் போடுவோமா???
அஷ் ஷேஹ் முனீர் நளீமிக்கு சிங்கள மக்கள் போட்ட  அதிகூடிய வாக்குகள் போல எமது பிரதேசத்தில் ஒரு ஹாமதூர் வந்து வாக்கு கேட்டால் நாம் போடுவோமா???
இனவாதம்
பிரதேசவாதம்
முற்றாக களைந்து
புதுயுகம் படைப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக