வியாழன், 3 அக்டோபர், 2024

இலங்கையில் கம்யூனிச ஆபத்தை உருவாக்கி மலையக மக்களின் குடியுரிமைக்கு வேட்டுவைத்த இந்திய இடது சாரிகள்

May be an image of text
May be an image of 1 person and text

ராதா மனோகர் : இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.
விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது .
முக்கியமாக இலங்கையில்  இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணி நிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்ன  என்பதும் அறியவேண்டிய விடயமாகும்
இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களை மாற்றிய  தொழிற்சங்கங்களும் கட்சிகளும் ஆற்றிய பணிகள் பற்றி அறிவதற்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவும் என்று எண்ணுகிறேன்
இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் UNP  என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை  -
1947 UNP Party  Journal -President J.R.Jayavardana : :


இலங்கை சம சமாஜ கட்சியின் தலைவர்களான  டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் திரு.எஸ்.சி.சி.அந்தோனிப்பிள்ளை ஆகியோர் தென்னிந்தியாவின் (கோயம்புத்தூர் பெரிய துணி  ஆலைகளில் ஒன்றின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக அங்கு  கைது செய்யப்பட்டனர்.May be an image of 1 person and text
இந்த  செய்தி ஒரு முக்கியமான செய்தியாகும்.
இவர்களின் வேலைநிறுத்தம் பற்றிய விபரத்திற்குள் நாம்  செல்வதை விட வேறு கோணத்தில் இதை நோக்கவேண்டும்
தொழிலாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் இந்தியத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்பது கவலைக்குரியது May be an image of 1 person and text
மதராஸ்  மாகாணத்தில் இடம்பெறும்  ஒரு விஷயத்தில் தலையிட எங்களுக்கு போதிய தகவல் அல்லது அதிகாரம் இல்லை
இந்திய  போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மதராஸ் மாகாண தொழிற்சங்கத்தின் தலைமை யில்  இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது என்பதுதான்  எங்களுக்கு கவலை அளிக்கிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பற்றும்  தலைவர்களில் நான்கு பேர் இலங்கையர்கள்.
அதாவது கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா,
திரு.லெஸ்லி குணவர்தன,
திரு. எஸ்.சி.சி.அந்தோனிப்பிள்ளை மற்றும்
 திருமதி கரோலின் அந்தோனிப்பிள்ளை குணவர்தன .
இது ஒரு இந்திய அரசியல் கட்சி
முக்கியமாக இந்திய தொழிலாளர்களிடம் . தன்னை நிலைநிறுத்திக் கொள்ள  தொழிலாளர்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் ,  முன்னணியில் நிற்க  வேண்டும்.

May be an image of 1 person and text
இவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி பாராட்டத்தக்கவை.
இவர்கள் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் நேரு ஆகியோரின் பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்திய மக்களை வறுமை மற்றும் துயரத்தில் இருந்து உயர்த்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
ஏனைய நாடுகளிலும் இதே போன்ற இயக்கங்கள் உள்ளன.
இலங்கையில் எங்களிடமும் தொழிலாளர் கட்சியும் பல்வேறு சோசலிஸ்ட் கட்சிகளும் பல ஆண்டுகளாக பல தொழிலாளர்களை மேம்படுத்த உழைத்துள்ளன.


இந்திய  போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியானது தனது கிளையை  இலங்கையிலும் நிறுவி,    அதன் மூலம் இலங்கையிலும் இயங்க தொடங்க முற்படும்போதுதான்,    
இலங்கைத் தொழிலாளர்களும், இந்த மண்ணைத் தங்கள் தாய் நிலம் என்று அழைக்கும் மில்லியன் கணக்கானவர்களும் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
இந்த இந்திய அரசியல் கட்சியான போல்ஷ்விவ்க் லெனினிஸ்ட் கட்சியின் அரசியல்  இலங்கை  நாட்டு மக்களையும்  பாதிக்கும்.
இந்தக் கட்சியின்  கூட்டங்களில் "உலகத் தொழிலாளர் அலகு: என்று சிவப்பு வண்ணம் பூசினாலும் ,
இதை உலகில் எந்த நாடும் இதுவரை தங்களது  அரசியல் கோட்பாடாக அந்த  முழக்கத்தை  தங்களின்  தேசியக் கொள்கையில் உள்வாங்கவில்லை.
இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம், இலங்கைத் தொழிலாளர்களின் ஊதியத்தை விட மிகக் குறைவாக உள்ளது
இந்த முழக்கம் (கம்யூனிச) நடைமுறைக்கு வந்தால்,
இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டால்,
அவர்களுடன் ஒரு இலங்கை தொழிலாளரும்  மட்டும் போட்டிபோட  முடியாது.
இந்தியாவின் போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி இந்திய தொழிலாளர்களுக்கு உண்மையாக இருந்தால் அவர்கள் இலங்கை தொழிலாளர்களை தியாகம் செய்ய வேண்டும்
இந்த விடயம் பற்றி  கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவை இந்தியப் பத்திரிகை ஒன்றிக்கு அளித்த பேட்டி கவனிக்கத்தக்கது.
அவரும் அவரது கட்சியும் இந்தியர்களின் தடையற்ற குடியேற்றத்தை வரவேற்றனர்,
மேலும் அவர்கள் இங்கு வந்தவுடன் அவர்களுக்கு முழு குடியுரிமை உரிமைகளை வழங்க்குவதாக உறுதி கூறினார்..
இந்தியாவின் 400 000 000 தொழிலாளர்களையும்  மற்றும் இலங்கையின்  6 500 000 தொழிலாளர்களையும்   சமநிலையில் வைத்து பார்க்கும்போது,
இலங்கை தொழிலாளர்களின்  கதி என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கலாம்.
பல நூற்றாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள் மிக குறைந்த சம்பளமும் அதன் காரணமாக  போஷாக்கின்மையிலும்   வறுமையிழும்  வாடும் தொழிலாளி,
இலங்கை தொழிலார்களோடு போட்டிபோட  அனுமதிக்கப்பட்டால்?
 ஒரு உதாரணம் தருகிறேன்.
 ஒரு கொழும்பு கோட்டை நிறுவனம் மூன்று சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு விளம்பரம் செய்தது.
இலங்கை விண்ணப்பதாரர் கோரும் ஊதியம் மிக அதிகமாக இருந்ததால் .
இந்நிறுவனம்   மூன்று தட்டச்சர்களை சென்னையிலிருந்து மிகக் குறைந்த ஊதியத்தில் இறக்குமதி செய்தது.
மற்றொரு எடுத்துக்காட்டு: பல புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் அச்சிடலை இந்தியாவில் செயல்படுத்த அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், இலங்கையை  விட, அவற்றை அங்கு அச்சிடுவது மலிவானது.
அந்த இந்திய அச்சு கோர்ப்பாளர்கள் மற்றும் பிற அச்சு வணிகத் தொழிலாளர்கள் இலங்கைத் தொழிலாளியிடம் வர அனுமதித்தால்?
இந்தியாவில் ஒரு அரசு ஆசிரியருக்கு மாதம் ரூ 15 ஊதியம் வழங்கப்படுகிறது
இந்திய காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு  அவர்களின் ஊதியம்  இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதே அந்தஸ்துள்ள இலங்கை ஆசிரியருக்கு அவர் அரசாங்கப் பணியில் சேரும் போது போர்க் கொடுப்பனவு உட்பட மாதம் 100 ரூபாய்க்குக் குறையாது.
திருவிதாங்கூரில் ஒரு பியூனின் சம்பளம்  ரூ. 15 ஆகும் அவருக்கு தேவையான மிகுதி பணத்தை  அவர் டிப்ஸ் தானே தேடிக்கொள்ள  வேண்டும்.
இலங்கையில் ஒரு பியூனுக்கு போர் கொடுப்பனவு உட்பட 75 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்தியத் தொழிலாளர்களை இலங்கை தொழிலாளர்களுடன்  போட்டியிட அனுமதித்தால்  என்ன நடக்கும் என்பது இலங்கைத் தொழிலாளர்களுக்குத் தெரியும்.
இலங்கையில் ஒரு இந்தியக் கட்சி செயல்பட அனுமதிக்கப் வேண்டுமா?   
தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சகாப்தம் என்ற பொய்யான வாக்குறுதிகள் மூலம், அவர்களின் அனுதாபங்களை வென்று ஆட்சியில் அமரப் போகிறார்களா?
டாக்டர்  கொல்வின் ஆர் டி சில்வா, இலங்கையில் அமைச்சராகப் பதவியேற்றால், இலங்கையில் இந்தியரின் நிலை மற்றும் நிலை குறித்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் இந்நாட்டிலுள்ள தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா?
இந்தியாவின்  போல்ஷ்சிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர் என்று அவர் தன்னை கூறினால்,  
இந்தியத் தூதுக்குழுவில் இடம் பெறுவதற்கும்,
இலங்கைத் தொழிலாளர்களுக்கு எதிராக இந்தியத் தொழிலாளர்களின் சார்பாகப் பேசுவதற்கும் அவரால்  எப்படி முடியும்?
சோசலிச இலங்கையை உருவாக்க விரும்பும் நாம் பிரச்சினையை நியாயமாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.
இந்த நிலத்தின் உள்ள  வளங்கள் இங்கு வசிப்பவர்களின் பொதுவான நலனுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலம் இலங்கையர்களுக்கு  உரியதா அல்லது இந்தியாவின் மக்களுக்கு  உரியதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
இந்தியர்கள் தங்கு தடையில்லாமல்  இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலகில் எந்த ஒரு சுதந்திர நாடும் வேறொரு நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் கட்சியை, அதன் தலைமையகத்தை தன் நாட்டில்  செயல்பட அனுமதிப்பதில்லை.

May be an image of 1 person and text that says 'HON.LESLEY GUNAVARDANA imgflip imgflip.com com'
கொல்வின் ஆர் டி சில்வாவும் நண்பர்களும் ரஷ்யாவுக்குச் சென்றால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள்,
அவர்கள் உலகின் ஒரே சோஷலிச அரசின் அந்த நாட்டின்  தொழிலாளர் மற்றும் விவசாயிகள்  பிரதிநிதிகளால் சுடப்படுவார்கள்
ரஷ்யா இங்கிலாந்து  அமெரிக்கா மற்றும் பிற சுதந்திர நாடுகள் தங்கள் சொந்த சுதந்திரமான சொந்த சோசலிச இயக்கங்களைக் கொண்டுள்ளன.

May be an image of 1 person and text
ஒரு சிறிய நாடு - சிறிய இனமாகிய நாம்  அடிமைத்தளையில் இருந்து சுதந்திரம் பெற்ற நாம்,
நமது விவகாரங்களில் வெளிநாட்டு அரசியல் தலையீடுகளின் தலைவர்களைக் கொண்டிருக்க முடியுமா?
இலங்கை மக்களின் தலைவிதியை அவர்களிடம் ஒப்படைக்க துணிய முடியுமா?
இந்திய  போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி மற்றும் அதன் சிலோன் பிரிவு, சமசமாஜக் கட்சி ஒரு தேசிய அச்சுறுத்தல் என்பதை நாம் விரைவில் உணரவில்லை என்றால்.
இந்தியத் துணைக் கண்டத்தில் மூழ்கிவிடாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு மிகவும் தாமதமாகலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக