செவ்வாய், 1 அக்டோபர், 2024

சிவகாசி விஸ்வநத்தம் தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்

தேவேந்திரன் நகர் தீண்டாமைச் சுவர்

தீக்கதிர் :சிவகாசி அருகே தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது.
பொதுவுடைமை இயக்கத் தலைவர், தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக நிலம், பட்டா, மனை கேட்டும், தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் களப் போராட்டங்கள் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்திருந்தது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டு பாதையில், தனிநபர் கட்டியுள்ள தீண்டாமை சுவரை அகற்றும் போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தால் இன்று தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக