செவ்வாய், 1 அக்டோபர், 2024

ஜெயம் ரவிக்காக ஆர்த்தி வீட்டில் 100 கோடி அழிச்சிருப்பாங்க.. பிரபலம் சொன்ன ....

jayam ravi aarthi cheyyaru balu

tamil.filmibeat.com-Karunanithi Vikraman :  சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை; ரவியுடன் பேசுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்று ஆர்த்தி தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் விவாகரத்து பெறுவதில் ரவி உறுதியாக இருக்கிறார். இப்படி நிலைமை போய்க்கொண்டிருக்க பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.


ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரவியும், ஆர்த்தியும் காதலோடும் அன்யோன்யத்துடனும் வாழ்ந்துவருவதாக பலரும் கருதினார்கள்.

ஆனால் சமீபகாலமாக அவர்கள் இரண்டு பேருக்குமிடையே சில வாக்குவாதங்கள் தொடர்ந்து வருகின்றன; கண்டிப்பாக இரண்டு பேரும் பிரியப்போகிறார்கள் என்று தகவல்கள் வரிசையாக வெளியாகிக்கொண்டேயிருந்தன. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
jayam ravi aarthi cheyyaru balu

ரவி வெளியிட்ட அறிவிப்பு: அந்தத் தகவல்களை உறுதியாக்கும்படி ரவி கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தன்னுடைய நலன் சார்ந்தவர்களுக்காக எனது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஆர்த்தி, 'ஜெயம் ரவியிடம் இதுதொடர்பாக பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அவர் தரப்பிலிருந்து அதற்கான வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார்.

அச்சச்சோ ரஜினிகாந்த்துக்கு என்னாச்சு?.. மருத்துவமனையில் திடீர் அனுமதி.. எப்போ டிஸ்சார்ஜ் தெரியுமா?அச்சச்சோ ரஜினிகாந்த்துக்கு என்னாச்சு?.. மருத்துவமனையில் திடீர் அனுமதி.. எப்போ டிஸ்சார்ஜ் தெரியுமா?

அவமானப்படுத்தப்பட்டேன்: இதனையடுத்து பேசிய ஜெயம் ரவி, வீட்டு வேலையாட்களுக்கு கொடுத்த மதிப்பைக்கூட ஆர்த்தி தரப்பில் தனக்கு கொடுக்கவில்லை. சின்ன சின்ன செலவுக்கான பணத்துக்குக்கூட அவமானப்படுத்தினார். ஒருகட்டத்தில் மூச்சு முட்டியது. வீட்டை விட்டு வெளியேறும்போது என்னிடம் கார் மட்டும்தான் இருந்தது என்று சொன்னார். மேலும் ஆர்த்தியிடம் இருக்கும் தன்னுடைய உடைமைகளை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்.

ஆர்த்தியின் விளக்கம்: ஜெயம் ரவி அப்படி பேசியதும் பலரும் ஆர்த்தியை குறை சொல்ல ஆரம்பித்தார்கள். நிலைமை இப்படி இருக்க நேற்று ஒரு விளக்கம் கொடுத்த ஆர்த்தி, "இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருந்தது எனது குற்றவுணர்ச்சி என்றோ, பலவீனம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை ரொம்பவே மதிப்பவள் நான். யாருடைய நற்பெயரையும் கெடுக்கும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ரவியிடம் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு.. அட இவ்வளவு நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களா?மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு.. அட இவ்வளவு நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களா?

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசிய அவர், "ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்று சொல்கிறார்கள். அங்கு அவர் ஆஃபிஸ் போட்டு பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இங்கேயே அவரை வைத்து படம் எடுப்பதற்கு ஏகப்பட்ட பேர் காத்திருக்கிறார்கள். பாலிவுட்டில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

100 கோடி ரூபாய்: நான் ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் தொடர்பாக பேசினேன். அப்போது அவர் என்னிடம், 'சார் ரவி இப்போது என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவரை வைத்து சுஜாதா (ரவியின் மாமியார்) மூன்று படங்கள் தயாரித்திருக்கிறார். கிட்டத்தட்ட அவரது சம்பளம், படத்துக்கு ஆன செலவுகள் என 100 கோடி ரூபாய் செலவு ஆகியிருக்கும் என கூறினார். மூன்று படங்களில் சைரன் படம் மட்டும்தான் ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக