புதன், 11 செப்டம்பர், 2024

Donald டிரம்ப் கமலா Haris நேரடி debate

 nakkheeran.in :  நானா? நீயா?- நேரடி விவாதத்தில் மோதிய அதிபர் வேட்பாளர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தில் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் தங்களது கருத்துக்களை நேருக்கு நேர் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடக்கும் நேரடி விவாதத்தில் ட்ரம்ப் பேசுகையில், ''கமலா அதிபர் ஆனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும். ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் நாடே இல்லாமல் போகும். பைடனின் தவறான கொள்கைகளை கமலாவும் பின்பற்றுகிறார்.

கமலா ஹாரிஸ் எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதை பற்றி கவலையில்லை. கொரோனா தொற்றை சிறப்பாகக் கையாண்டு அமெரிக்காவிற்கான மிகச்சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். அமெரிக்க தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று அதிபரானது நான்தான். குடியரசு கட்சி வேட்பாளர்கள் யாரும் இதுவரை பெறாத வகையில் அதிக வாக்குகள் பெற்று வெல்வேன். பல நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கமலாவிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்'' என்றார்.

கமலா ஹாரிஸ் பேசுகையில், ''உலகத் தலைவர்கள் ட்ரம்ப்பை பார்த்து சிரிக்கின்றனர். பல நாட்டின் ராணுவ தலைவர்கள் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கின்றனர். நாடு முழுவதும் வன்முறை நடந்தபோது அதை கைகட்டி வேடிக்கை பார்த்தவர் ட்ரம்ப். அமெரிக்காவின் அனைத்து தரப்பு மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டமும் அவரிடம் இல்லை. டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கான வரிச் சலுகை கொடுத்தது; நடுத்தர மக்களின் முன்னேற்றவில்லை. கடந்த தேர்தலில் தோற்றபோது வன்முறையை தூண்டிவிட்டவர். குற்றச்செயல்கள் பற்றி மட்டுமே ட்ரம்பிற்கு பேசத் தெரியும். அவரே ஒரு குற்றவாளி தான். மீண்டும் டிரம்ப் அதிபரானால் அவர் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறார். நெருக்கடியான காலத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் திறமையான சரியான தலைவர் தேவை. மக்களின் பிரச்சனைகள் கனவுகள் குறித்து ட்ரம்ப் பேச மாட்டார் யோசிக்க மாட்டார். நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதை பற்றி விவாதிப்போம். இனம், மதம் பற்றி பேசுவது தேவையற்றது. அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் ஒபாமாவை பற்றி தவறான கருத்துக்களை பரப்பிவர் டிரம்ப். அமெரிக்காவை இன பிரிவினை மூலம் துண்டாட  நினைப்பவர் டிரம்ப் '' என்றார்.

அதற்கு டிரம்ப், ''மக்களுக்காக நான் பேசுகிறேனா இல்லையா என்பது எனது கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும். நான் நடத்தும் பரப்பரை கூட்டங்களில் இருந்து ஒருவர் கூட வெளியேறுவதில்லை'' என பேசினார். தொடர்ந்து நேரடி விவாதம் நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக