ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

சுசித்ரா : சரக்கு அடிக்க மாட்டேன்.. தம்முதான் அடிப்பேன்.. பேட்டியில் அதிரடியாக பல விடயங்களை போட்டுடைத்தார்

 தினமலர் : சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி தான் சுசித்ரா.
சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போன இவர்,
பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுச்சி லீக்ஸ் விஷயம் குறித்து பேசி வருகிறார்.
கடந்த சில மாதத்திற்கு முன் பேட்டி அளித்த இவர் தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார்.
இது பெரும் புயலை கிளப்பியதை அடுத்து கார்த்திக் குமார், தன்னை பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்காக 1 கோடி கேட்டு,சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.



சுசித்ராவின் கருத்துகளுக்கு இடைக்காலத் தடை விதித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பாடகி சுசித்ரா பேட்டி: இந்நிலையில் சுசித்ரா மீண்டும் My India youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சுச்சி லீக்ஸ் புகைப்படங்களை நான் வெளியிடவே இல்லை என் முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு என் அக்கவுண்டின் பாஸ்வேர்டு தெரியும் என்பதால், அவர் தான் வெளியிட்டு இருக்கிறார்.
நான், இதுகுறித்து அவரிடம் பேசிய போது, தனுஷ் சொல்லித்தான் அனைத்தையும் வெளியிட்டேன் என்று சொன்னார்.

இருந்தாலும் நான் நம்பவில்லை, அதில் தனுஷின் போட்டோ இருக்கும் போது, அதை அவர் எப்படி வெளியிடுவார் என்று கேட்டேன்.
அதற்கு கார்த்திக் குமார், தன் மீது பழிவராமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனுஷின் ஐடியா என்று சொன்னார்.

அவர் என் நல்ல நண்பர்: நானும், தனுஷும் நீண்ட நாள் நண்பர்கள் என்பதால், தனுஷ் பற்றி எனக்கு நன்றாக தெரியும் இதை அவர் செய்து இருக்கவேமாட்டார்.

ஆனால், நான் புகார் அளித்த போது எப்ஐஆரில் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் பெயரை சேர்த்துத்தான் புகார் கொடுத்தேன்.
போட்டோக்கள் வெளியானதும், நான் தனுஷின் மெயில் ஐடிக்கு இதற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மெயில் போட்டேன்.

அதன் பின் தனுசை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தேன்.
இது தனுஷ் செய்யவில்லை என்றால், சொல்வதற்கு பல வழிகள் இருந்தது. ஒரு ட்வீட் போட்டு இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால், அதை அவர் செய்யவில்லை. போட்டோ, வெளியான அடுத்த 4 மணிநேரத்தில் என்னுடைய மொபைல் உள்ளிட்ட சாதனங்களை போலீசார் கைப்பற்றி 10 நாட்களுக்கு பிறகே கொடுத்தனர்.

கண்கலங்கிய சுசித்ரா: தொடர்ந்து பேசிய அவர், நடிகர்கள் அனைவரும் தினமும் நைட் பார்ட்டி செல்வார்கள்.
ஆனால், எனக்கு பார்ட்டி செல்வது சரக்கு அடிப்பது பிடிக்காது. இதனால், நான் அங்கு போக மாட்டேன்.
ஆனால், தம் அடிப்பேன், அதுவும் இந்த பிரச்சனைக்கு பிறகு தான் ஐந்து வருஷமாக தம் அடித்து வருகிறேன்.

இதுக்கு மேல என் வாழ்க்கையில் என்ன இருக்கு, நான் என்ன குழந்தை பெத்துக்கொண்டு நல்லா வாழப்போகிறேனா.
சுசித்ரா ஒரு பைத்தியம், டிரக் அடிக்ட் என்று தமிழ்நாடே என்னை காரி துப்புது, கேவலமா இருக்கு, கிழவினு இந்த தமிழ்நாடே என்னை கேவலமா பாக்குது.

இனி மேல எனக்கு என்ன இருக்கு, இந்த விஷயத்தை நினைத்து நான் அழவில்லை, பாடமுடியவில்லையே என்று தான் கண்கலங்கினேன் என்று சுசித்ரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக