சனி, 7 செப்டம்பர், 2024

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஆக்சிஜன் சப்போர்ட்- ஐ துண்டித்து கணவன் கொலை

UP Horror: Ambulance Driver & Helper Allegedly Molest Woman, Remove  Husband's Life Support Leading To His Death

மாலை மலர் :   உயிருக்குப் போராடும் கணவனுடன் ஆம்புலன்சில் வந்த மனைவிக்கு ஆபுலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் பாலியல் தொல்லை அளித்து கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.


இந்நிலையில் ஆம்புலன்சை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு டிரைவரும் உதவியாளரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தற்போது அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த உதவியாளர் ரிஷஇப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக