ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

முற்போக்காளர்களுக்கு அவங்க கேட்கும் வடைகள் சுட முடியாது

May be an image of 5 people and people studying

Loganayaki Lona  :  முற்போக்காளர் பள்ளிக்குள் வர வேண்டும் வர வேண்டும்..நீங்கள் வராமல் அரசைக்குறை சொல்லாதீர்கள் என திமுகவினர் சிலர் முற்போக்காளர்களை  சாடுகின்றனர்.
இந்தப்பள்ளி நான் பணி செய்த கிராமத்துக்கு அருகில் உள்ள அரசுப்பள்ளி.
ஆனால் என்னோட பணி இட எல்லைக்குள் இல்லை.அருகில் உள்ள பள்ளி தான்.அந்தகிராம மாணவிகள் பேருந்தில் தினமும் கவனித்ததால்,பேசியதால் தங்கள் ஊர் மாணவர்கள் ஹார்ன்ஸ்,கூல்லிப் பயன்படுத்துவதாக கூறினர்.
இது குறித்து துறை அதிகாரிக்கு அறிவித்தோம்.அவர்களது நடவடிக்கை எந்த அளவு முழுமை பெற்றது என்பது தெரியாது.
மீண்டும் அதே பள்ளி குறித்து புகார்கள் வந்தன.அந்த தலைமை ஆசிரியரிடம் பள்ளி இடைநின்ற எங்கள் பகுதி மாணவர்களை சேர்ப்பது குறித்து ஏற்கனவே சிலமுறை  பேசியிருக்கிறேன்.


பள்ளியில் வந்து போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடல் நடத்தலாமா என கேட்டிருந்தேன்.முதலில் காவல்துறை எடுத்து விட்டதாக தவிர்த்து பின் அவரும் அனுமதி தந்தார் .இன்னொரு ஆசிரியரும் வரும்படி தெரிவித்தார்.
அடுத்த நாள், எனக்கு பணி நீக்கம் என ஆணை வந்து விட்டது.செய்ய நினைத்த ஒரு வேலையை விட்டுச்செல்வதில் மனச்சிக்கல் என்பதால்,
அன்று மதியம் சென்று சமூக ஆர்வலராக நிகழ்வு நடத்திட்றேன்.என மீண்டும் அனுமதி வாங்கிச்சென்றேன்.அவர் அனுமதி தந்தார்.எங்களுக்கு ஒன்னும் ப்ரச்சனை வராதே எனகேட்டுக்கொண்டு சரி  என்றார்.
போதை என்றால் என்ன?
(தன்னிலை மறக்கச்செய்யும் அனைத்தும் போதைதான் )
உடல் நல பாதிப்பு என்னென்ன?மனநல சிக்கல் என்ன?
வாழ்வியலை எப்படி பாதிக்குது?
எதிர்கால சந்ததி உருவாக்கத்தில் என்னென்ன ப்ரச்சனை வரும்?
மலட்டுத்தன்மைக்கு போதை ஒரு காரணமா?
அவர்களுக்குத்தெரிந்த போதைப்பொருள் என்னென்ன?
மத போதை ,சீரியல் போதை,மொபைல் போதை என அனைத்தும் பேசினோம்.
சீரியல் போதை,மத போதகர்கள் உருவாக்கும் போதை குறித்து கேட்டோம்.
 ஆசிரியர்கள் புகுந்து மாணவர்களுக்கு தேவையானதை மட்டும் கூறும்படி கேட்டனர்.சரி என பின்வாங்கித்தான் ஆகனும்.வேற வழி இல்ல.
போதைப்பொருட்கள் குறித்து கேட்ட போது அனைத்துப்பெயர்களும் மாணவர்கள் கூறினர்
எப்படி தன் நண்பர்களை மீட்கலாம்?என கேள்வி வந்தது.
தனது உறவுகளுக்கு வழி காட்டும்படி கேட்டனர்.அப்பா,சித்தப்பா மாமா என பலருக்கு வழிகாட்டல் கேட்டனர் .
தான் எப்படி இதில்  வாலண்டியராக செயல்படுவது  என கேட்டனர்.
இப்படியாக நினைத்த அளவு feedback இல்
நிகழ்வு முடிந்த பின் மாணவிகளுக்கு menstural hygiene குறித்து பேச சொன்னார் ஒரு ஆசிரியர்.
மாதவிடாய் குறித்து உடல் மாற்றத்தை சொல்லிக்கொடுத்துவிட்டு மாதவிடாய் தீட்டா/இயற்கையா என ஒரு கேள்வி தான் கேட்டேன்.
இல்லை என மாணவிகள் கூற,சில ஆசிரியர்கள் அவர்களுக்குரியது மட்டும் சொன்னால் போதும் ..பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கனும்..துப்பட்டா ஒழுங்காபோடுஙக் ,pads அ ஒழுங்கா குப்பைத்தொட்டில போடனும் என  ஆசிரியர் இடைமறித்து  இறங்கி பேசினார்.
சிரித்துக்கொண்டிருந்த ,நட்போடு பேசிக்கொண்டிருந்த மாணவிகள் வழக்கமான வகுப்பறை மனநிலைக்குள் சென்றனர்.
நாங்கள் சொல்லாததா இவர்களுக்கு..தினமும் இதெல்லாம் சொல்லித்தருவோம் என்றார்.
 இதற்கு இன்னொரு நாள் அனுமதி பெற்று IEC உடன் நடத்த வேண்டும் என நினைத்துக்கொண்டேன் .பறிக்கப்பட்ட வேலை .வாய்ப்பு வந்தால் நடத்துவோம்.
இப்படி படாத பாடுபட்டுத்தான் உள்ள போக முடியும்.அவங்க விரும்பும் எல்லைக்குள் நின்று தான் பேச முடியும்.ஒரு பள்ளிக்கு போகனும்னா பல முறை அவர்களுடன் தொடர்புகொண்டு அவங்க நம்பிக்கை வாங்கிதான் போக முடியும்.
ஒன்றரை ஆண்டு தொடர் முயற்சிக்கு பின் தான் உள்ளயே போக முடிந்தது.
அரசு வழி வகுக்காமல் அடிப்படை சிக்கல் எதையும் விவாதிக்க முடியாது.
இருந்த பணி அடையாளத்தையும் பறிச்சுட்ட போ...போ...அப்டின்னா எப்டி போக முடியும்?
இன்னொரு பள்ளியில் மாற்றுப்பாலினத்தவர்கள் குறித்து கேள்வி கேட்டபோது அதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லை என்றார் ஒரு ஆசிரியர்.உங்கள் வீட்டில் ஒரு திருநங்கை மகளோ,மகனோ இருந்தா பேச விட மாட்டீங்களா இப்டி தடுக்கலாமான்னு கேட்டு பேசினேன்.
மாணவர்களை அறிவியலுக்குள் கொண்டு செல்வது இயல்பான விடயம் தான்.ஆசிரியர்களுக்கு அதில் சிக்கல் அதிகம் இருக்கு.
முற்போக்காளர்களுக்கு அவங்க கேட்கும் வடைகள் சுட முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக