திங்கள், 23 செப்டம்பர், 2024

மும்பாய் சிறுமிகள் பலாத்கார குற்றவாளி என்கவுண்டர் கொலை

   மாலை மலர் :  மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து,
நகரம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கிய நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அக்சய் ஷிண்டே [23 வயது] போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்துள்ளான்.


விசாரணைக்காக தலோஜா ஜெயிலில் இருந்த ஷிண்டேவை போலீஸ் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்த நிலையில் மும்பை பைபாஸ் சாலையை நெருங்கிம்போது கான்ஸ்டபிளின் துப்பாக்கியை பிடுங்கி ஷிண்டே சுடத் தொடங்கியுள்ளான்.

எனவே தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஷிண்டே படுகாயமடைந்தான். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி அங்கு ஷிண்டே உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக