சனி, 28 செப்டம்பர், 2024

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு

 தினமணி : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
தமது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்புஉறுதிப்படுத்தியுள்ளது. அவர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இறந்துவிட்டார் என்று குழு உறுதிப்படுத்தியது,

“தெற்கு புறநகர்ப் பகுதியில் துரோகத்தனமான சியோனிசத் தாக்குதலைத் தொடர்ந்து” அவரது மரணம் நிகழ்ந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ரல்லாவை ஒரு தியாகி என்று விபரித்த ஹிஸ்புல்லா,இஸ்ரேலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக