வெள்ளி, 20 செப்டம்பர், 2024

திருப்பதி லட்டு - மாட்டுக்கொழுப்பு பன்றி கொழுப்பு மீனெண்ணெய் சோயா எண்ணெய் சோதனையில் அதிர்ச்சி

 tamil.oneindia.com  - Shyamsundar :  திருப்பதி: திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.



புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.

ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ரிசல்ட் சொல்வது என்ன?: இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும்.
“இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்”.. திருப்பதி லட்டு விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி காட்டம்!

இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.

இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பின் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.

சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு
Exclusive திருப்பதி லட்டுல விலங்கு கொழுப்பு கலப்படமா? “இந்த பாவம் சும்மா விடாது” கொதிக்கும் மக்கள்!

சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி

சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது.

பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினால், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளன.

இனி என்ன நடக்கும்?: நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு YSRCP கடுமையாக பதிலளித்துள்ளது. சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தி, லட்டுகள் மீதான புனிதத்தை கேவலப்படுத்தி பெரும் பாவம் செய்துள்ளார்.

திருமலை பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்கள் உண்மையிலேயே கேவலமானவை. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை, இப்படி குற்றஞ்சாட்டுவதில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்கவும் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த, திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் நானும், எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். நாயுடுவும் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? என்று ஒய்.வி.ஆர்.சி.பி.யின் ராஜ்யசபா உறுப்பினரும், திருமலை மலைக் கோயிலை நிர்வகிக்கும் வாரியமான டிடிடியின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி விமர்சனம் வைத்துள்ளார்.

இப்போது இந்த லட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் அந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வது குறையலாம். முக்கியமாக தீவிர இந்துக்கள், மாமிசம் சாப்பிடாத இந்துக்கள், மாட்டுக்கறி சாப்பிடாத இந்துக்கள் செல்வது குறையும். முக்கியமாக லட்டு விற்பனை மொத்தமாக படுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக