சனி, 14 செப்டம்பர், 2024

எஸ் வி சேகர் : நிர்மலா சீதாராமன் கோவை ஓட்டல் முதலாளியை மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன் . இனி நான் பாஜகவில் இல்லை

அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - நடிகர் எஸ்.வி சேகர்  காட்டம் - தமிழ்நாடு

tamil.oneindia.com -  Rajkumar R  :   கோவை: கோவை அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இந்த விவகாரத்தை கடுமையாக கண்டித்து உள்ளதோடு
இனி பாஜகவில் தொடரப்போவதில்லை என கூறியிருக்கிறார். மேலும் சீனிவாசன் சமூகம் சார்ந்த ஒரு லட்சம் ஓட்டுகள் பாஜவுக்கு கிடைக்காது என கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக நேற்று முன் தினம் கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.



சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய கோவை அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை சுட்டிக்காட்டும் விதத்தில் குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி இருக்கு, சமாளிக்க முடியல என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழகத்தில் இருந்தும் தேசிய அளவில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிர்மலா சீதாராமனுக்கு எதிரா குபீர் முழக்கம்! மேஜையை தட்டிய கவுன்சிலர்கள்

இந்நிலையில் கோவை அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இந்த விவகாரத்தை கடுமையாக கண்டித்து உள்ளதோடு இனி பாஜகவில் தொடரப்போவதில்லை என கூறியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,”அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். என்னை பொருத்தவரை மன்னிப்பு கேட்க வைத்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டது தவறு. ஒரு பெண்ணின் உணவு பழக்கம் குறித்து எப்படி பேசலாம் என கேட்கிறார்கள்.

ஒருவர் மது அருந்துகிறார் அல்லது வேறு ஏதும் சாப்பிடுகிறார் என்று கூறினால் தவறு.. ஜிலேபி சாப்பிடுவார் எனக் கூறியதில் என்ன தவறு. மேலும் அன்னபூர்ணா ஹோட்டல் சீனிவாசனை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்தது யார்? வீடியோ எடுத்திருப்பதின் மூலம் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என தெரிய வந்திருக்கிறது. வீடியோவை எடுக்க வைத்தது நிர்மலா சீதாராமன் அல்லது வானதி சீனிவாசனா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.

வாக்கு அரசியல் என்று வரும்போது ஒவ்வொரு வாக்குமே முக்கியம். அன்னபூர்ணா சீனிவாசனை இப்படி நடத்தியதன் மூலம் அவர் சமூகம் சார்ந்த ஒரு லட்சம் வாக்குகளை பாஜக இழந்திருக்கிறது. சீனிவாசன் பெருந்தன்மையுடன் மன்னிப்பே கேட்டிருந்தாலும் அவரது சமூகத்தினர் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக அண்ணாமலை வந்த பிறகு பூஜ்ஜியம் ஆகிவிட்டது.
உடனே களம் வந்த காங்கிரஸ்.. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக நாளையே கோவையில் செல்வப்பெருந்தகை போராட்டம்

செய்தியாளர்களை சந்திக்க தைரியம் இல்லை என்றால் பிரஸ்மீட் வைக்கக் கூடாது. அல்லது அறிக்கை வெளியிட்டு விட்டு சென்றுவிடலாம். ஆனால் பொதுவெளியில் பேசத் தெரியாமல் பேசக்கூடாது. வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு கேட்பது போல அண்ணாமலை நடித்திருக்கிறார். அவர் வந்த பிறகு பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு கூட மரியாதை இல்லை. அனைவரையும் ஓரங்கட்டி விட்டு தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

அதிமுகவில் இருந்து வந்த மயிரையன் ஆறு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்காமல் மீண்டும் அந்த கட்சிக்கு சென்று விட்டார். இப்படித்தான் நிலைமை இருக்கிறது. மோடி கேட்டுக் கொண்டதால் பாஜகவில் இணைந்தேன். இப்போது பாஜகவை விட்டு விலகுகிறேன். மீண்டும் மோடி அழைத்தால் பாஜகவுக்கு வருவேன். அண்ணாமலை இருக்கும் வரை பாஜக முன்னேற்றம் அடையாது” என காரசாரமாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக