செவ்வாய், 24 செப்டம்பர், 2024

துரை தயாநிதி மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார் 10 மாதங்களின் பின் பூரண நலம்

மின்னம்பலம் - Kavi  :  முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து இன்று (செப்டம்பர் 24)  வீடு திரும்பினார் .
கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு துரை தயாநிதி மாற்றப்பட்டார்.


தனது அண்ணன் மகனான துரை தயாநிதியை அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு முறையும், சிஎம்சி மருத்துவமனைக்கு இருமுறையும் சென்று பார்த்து  முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து வந்தார்.  உரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களிடமும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், பத்து மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரை, முக அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய துரை தயாநிதியை புகைப்படம் எடுக்க விடாமல் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீது மருத்துவமனை ஊழியர்கள் தாக்க முயன்றதால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக