வியாழன், 22 ஆகஸ்ட், 2024

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி; நெல்லை வண்ணாரப்பேட்டையில் ரசிகர்கள் ஆரவாரம்!

 tamil.samayam.com  - மதுமிதா.M  :   நடிகர் விஜய் அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார், இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்க நிர்வாகிகள அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
விஜயின் கட்சிக்கொடி அறிமுகம்
இந்த நிகழ்ச்சியில் விஜயின் பெற்றோர் கலந்து கொண்டனர், விஜயின் கட்சிக்கொடி அறிமுகம் செய்யும்பொழுது விஜயின் கண்கள் கலங்கியதாகவும், புஸ்ஸி அழுததாகவும் வீடியோ வெளியாகி உள்ளது. மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் இரண்டு போர் யானைகள் அணிவகுக்க வாகை மலரும் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளது.



கட்சிக்கொடி அறிமுக நிகழ்ச்சி
இந்த கொடி வடிவியமைப்புக்கான காரணத்தை பின்னர் தெரிவிப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது கட்சி கொடியை அறிவித்தது வரை பல்வேறு கட்சியினர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் கட்சிக்கொடி அறிமுக நிகழ்ச்சியானது சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அவருடைய ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்த மகிழ்ச்சி செய்தியை கொண்டாடி வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அந்த வகையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தங்கள் கட்சி கொடி அறிமுகப்படுத்தத்தை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்கள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மிக பெரிய எதிர்பார்ப்பில் அறிமுகமான கட்சி கொடி
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி எப்படி இருக்கும் என அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்கள் மற்றும் விஜயின் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார். விஜயின் கட்சி கொடியில் வாகைமலர் இடம் பெற்றுள்ள நிலையில் வாகை என்றால் வெற்றியென பொருள்படுகின்றது கொடியை ஏற்றி வைத்து பாடலை ஒலிக்க செய்து நடிகர் விஜய் 10 நிமிடங்கள் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக