வியாழன், 8 ஆகஸ்ட், 2024

திவ்யா சத்யராஜ் : மாதவிடாய் வலியால் துடித்த என்னை! சொந்தக்காரர்களே ஆள் வைத்து அடித்தனர்!

divya sathyaraj coimbatore

tamil.oneindia.com  -  Vishnupriya R :  கோவை: நான் வளர்ந்த விதத்தை எனது உறவினர்கள் சிலர் அவமானப்படுத்தி பேசி, என்னை கூலிக்கு ஆள் வைத்து அடித்தனர்.
எனக்கு மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு இருந்தது, அங்கிருந்து எப்படியாவது தப்பி சென்னை வந்துவிட வேண்டும் என தைரியமாக போராடி வந்துவிட்டேன் என திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் எனக்கு கோயமுத்தூர் என்றாலே பயமாக இருக்கும். ஏனெனில் நான் வளர்ந்த விதம் பற்றி என்னுடைய உறவினர்கள் சிலரே அவமானப்படுத்தினார்கள்.

ஒரு நாள் யாரோ சிலர் என்னை அடிப்பதற்காக காசு கொடுத்து ஏவியிருந்தனர். அந்த சமயத்தில் எனக்கு மாதவிடாய் இருந்ததால் உதிரப்போக்கு அதிகமாகவே இருந்தது. அப்போது எனது செல்போனையும் நான் தொலைத்துவிட்டன். இதில் இருந்து தப்பி ஒரு வழியாக சென்னை வந்துவிட்டேன்.

சென்னை வந்த பிறகு அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து எனக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையிலிருந்து நான் வெளியே வரவில்லை, இதனால் அப்பாவுக்கு என்னை தாக்கியவர்கள் மீது அதிக கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இலங்கையில் தமிழ் பெண்களுக்கு நடந்த பிரச்சினையுடன் ஒப்பிட்டால் என்னுடைய பெரிய பிர்சசினை இல்லை என அறிந்து கொண்டேன்.

எந்த பெண் தனது பிரச்சினைகளுக்காக போராடுகிறாரோ அவர் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்காகவும் துணை நிற்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மதங்கள் ஆணவக் கொலைக்காகவும் , அன்பையும் காதலையும் சீரழித்து, பெண்களை அவமானப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Trump says Justin Trudeau could be Fidel’s Son | Oneindia Tamil
Trump says Justin Trudeau could be Fidel’s Son | Oneindia Tamil

நான் கடுமையாக தாக்கப்பட்ட போதிலும், இப்படிப்பட்ட மதங்களுக்கு எதிராகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் நான் நிச்சயம் போராடுவேன். வாழ்க்கை என்பது அத்தனை எளிதானது இல்லை, எனது காயங்களும் ஆறவில்லை. ஆனால் நான் கோவை செல்வதை தொடர்வேன். என் மனதில் அன்புடனும் தைரியத்துடனும் நான் செல்வேன். வலிமையான பெண்கள் பிறரிடம் அன்பை செலுத்துவதை நிறுத்துவதில்லை என தனது இன்ஸ்டா போஸ்ட்டில் திவ்யா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி மகாநதி சீரியலில் திவ்யா கணேஷுக்கு பதிலாக சன் டிவி கதாநாயகி.. முதல் நாளே இப்படியா ஆகணும்? விஜய் டிவி மகாநதி சீரியலில் திவ்யா கணேஷுக்கு பதிலாக சன் டிவி கதாநாயகி.. முதல் நாளே இப்படியா ஆகணும்?

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் பிரபல ஊட்டச்சத்து நிபுணர். மகிழ்மதி என்ற இயக்கத்தை நடத்தி அதன் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளித்து வருகிறார்.

உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அட்சய பாத்திரத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நெடுந்தீவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த செரண்டிப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இவர் சில காலமாக அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். ஆனால் பதவிக்காகவும் பணத்துக்காகவும் அரசியலுக்கு வர கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு திவ்யாவுக்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதை அவரே ஒப்புக் கொண்டார். மேலும் ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். அது போல் அவர் புதிய கட்சியை தொடங்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக