ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

மறுபிறவி எடுத்து வந்த டயானா?

 Tamil Onindia : இளவரசி டயானா குறித்த சர்வதேச அளவிலான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.. யாரிந்த டேவிட்? யாரிந்த பில்லி? இந்த குழந்தை சொல்வதெல்லாம் உண்மைதானா? என்ற ஆச்சரியமும், குழப்பம் உலகளவில் வெடித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல். இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில், தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பெயர் பில்லி காம்பெல்.
இங்கிலாந்து இளவரசி டயானா, தற்போது மறுபிறவி எடுத்து, தன்னுடைய மகனாக பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் டேவிட்.. இதுகுறித்து டேவிட் சொன்னதாவது:



“1997ல் இளவரசி டயானா கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து 18 வருடம் கழித்துதான், பில்லி எனக்கு பிறந்தான். 2 வயது குழந்தையாக இருந்தபோதே, டயானாவின் போட்டோவை காட்டி, “அது நான்தான்” என்று மழலை வார்த்தைகளில் சொன்னான். நாங்கள் அனைவருமே இதைக் கேட்டு சிரித்துவிட்டோம். குழந்தை ஏதோ வேடிக்கையாக பேசுகிறான் என்று நினைத்தோம்.

ஆனால், 4 வயதில், டயானா பற்றின வாழ்க்கை விவரங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான். டயானாவின் வாழ்க்கை, அவரது துயர மரணம் இதுகுறித்தெல்லாம் துல்லியமாக பில்லி சொன்னான்.

அவன் பேசியதை கேட்டு, நானும் என் மனைவியும் அப்படியே வாயடைத்து போய்விட்டோம். காரணம், அதுவரை டயானா பற்றியோ, இங்கிலாந்து அரச குடும்பம் பற்றியோ நாங்கள் இவ்வளவு துல்லியமாக அறிந்திருக்கவில்லை.

டயானாவின் மொத்த குடும்ப விவரங்களையும் பில்லி சொன்னான். டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம்.. இந்த ஜான் பற்றியெல்லாம் நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. டயானா பிறக்கும் முன்பே ஜான் இறந்துவிட்டாராம். அதனால்தான், டயானா இருக்கும்போது, ஜான் பற்றின தகவல்கள் மீடியாக்களில் வரவில்லை.

ஆனால், பில்லி சொன்ன பிறகு, அது உண்மை என்று நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். ஆரம்பத்தில் பில்லியின் பேச்சை நம்பாமல் இருந்த நாங்கள், இதற்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்தோம்.

அதேபோல, டயானாவின் இன்னொரு போட்டோவையும் நாங்கள் பில்லியிடம் காட்டினோம்.. நான் ஒரு இளவரசியாக இருந்தேன்.

ஒருநாள் சைரன் ஒலித்தபடி வண்டிகள் வரிசையாக வந்தன.. அப்போதுதான் நான் இனிமேல் இளவரசி இல்லை என்பதை உணர்ந்தேன் என்று பில்லி சொன்னதுமே, எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது” என்றெல்லாம் கூறுகிறார் டேவிட்.

டேவிட்டின் இந்த பேச்சுதான் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.. அப்படியானால், டயானாவின் மறுபிறவிதான் பில்லியா? ஜான் பற்றி பில்லிக்கு எப்படி தெரியும்?” என்றெல்லாம் சர்வதேச அளவில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக