வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 150mg விந்துக்கள் : கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் !

 கலைஞர் செய்திகள் - KL Reshma  :  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் என்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவியாக பயிற்சி பெற்று வந்துள்ளார் 31 வயது பெண் மருத்துவர். இந்த சூழலில் இவர் கடந்த ஆக.8-ம் தேதி மருத்துவமனைக்கு இரவு நேர்ப்பணியில் இருந்துள்ளார்.
அப்போது இரவு சாப்பாடு சாப்பிட்ட பின்னர், சுமார் அதிகாலை 2 மணியளவில் தனக்கு அதிகமாக தூக்கம் வருவதாக கூறி அருகில் இருக்கும் வளாகத்திற்கு தூங்க சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை சக மாணவர்கள் வந்து பார்க்கையில், மருத்துவ மாணவி அந்த அறையில் அரை நிர்வாணமாக இருந்துள்ளார்.


அவரது உடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே துணி இருந்துள்ளது. மேலும் அவரது உடலில் கடும் காயங்களும், அனைத்து பகுதிகளியிலும் இரத்தம் காணப்பட்டது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணையை தொடங்கினர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அதே கல்லூரியில் போலீசாருடன் சேர்ந்து தன்னார்வலராக செயல்பட்ட சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.
உடலில் 150mg விந்துக்கள் : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் !

அதோடு சிசிடிவியில் சஞ்சய் ராய் நள்ளிரவு நேரத்தில், அந்த பெண் இருக்கும் இடத்துக்கு செல்கிறார். அவர் கழுத்தில் ப்ளூடூத் ஹெட்செட் இருக்கிறது. அதன்பின்னர் அவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வெளியே வரும்போது, அவர் கழுத்தில் அந்த ப்ளூடூத் ஹெட்செட் இல்லை. அந்த ஹெட்செட் மாணவியின் உடல் அருகே காணப்பட்ட நிலையில், அதனையும் ஒரு ஆதாரமாக போலீசார் வைத்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு மாணவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில்தான் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. அதாவது மாணவியின் உடலில் இருந்து 150 மில்லிகிராம் விந்துக்கள் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் அந்த பெண் மருத்துவர் பலரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் அந்த பெண்ணை வன்கொடுமை செய்வதற்கு முன்பாக அவரது கண்ணாடி உடைக்கப்பட்டு, கண்களின் குத்தியதால் கண்களில் இருந்து இரத்தம் கசிந்துள்ளது. மேலும் காதில் பலமாக அடித்ததால், காதுகளில் இருந்தும், தலையின் பின்புறம் தாக்கியதால் தலையிலும் கடுமையாக இரத்தம் கசிந்துள்ளது.
உடலில் 150mg விந்துக்கள் : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் !

மேலும் அந்த பெண்ணின் கால்கள் 90 டிகிரி செல்லும் அளவுக்கு உடைக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரத்தின் உச்சத்தில் அந்த பெண் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதெல்லாம் நடக்கும்போது அந்த பெண் சத்தம் போடக்கூடாது என்பதால் அவரது வாய் கிழிக்கப்பட்டு, தொண்டை உடைக்கப்பட்டு, கழுத்தில் உள்ள தைராய்டு கேலண்டும் உடைக்கப்பட்டுள்ளது.

வெறும் 2 மணி நேரம் இடைவெளிக்குள் அந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தலை மற்றும் கால் உடைக்கப்பட்டபோது அந்த பெண் மருத்துவர் இறந்ததாக சொல்லப்படுகிறது.
உடலில் 150mg விந்துக்கள் : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் !

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இதனால் அவருக்கு அனைத்து இடங்களிலும் செல்வதற்காக அதிகாரம் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் யார், யார்? என்று போலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், பலரும் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். நிர்பயா, ஹத்ராஸ் பெண் வன்கொடுமை, ஆசிஃபா உள்ளிட்ட கொடூர வன்கொடுமை பட்டியலில் தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுக்கு பலரும் கண்டன குரல்களை எழுப்பி வந்தாலும், சில கொடூர காரர்கள் திருந்துவது போல் இல்லை. இதுபோல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக