திங்கள், 8 ஜூலை, 2024

இந்திய தேர்தலும் முடிந்தது - போரும் முடிந்தது சம்பந்தர் அய்யா விரும்பிய மாதிரியே எல்லாம் நடந்தது!!!

May be an image of 1 person

 ராதா மனோகர் : மறைந்த திரு .சம்பந்தர் அய்யாவின் ஆளுமைக்கு சான்றாக ஒரு வரலாற்று செய்தி!
இலங்கையில் போர் முடிவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் ஒரு சில இலங்கை தமிழ் எம்பிக்கள் இந்திய ஒன்றிய தலைவர்களோடு மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள்
அப்போது ஆட்சியில் ( 2009) இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களோடும் ,
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவின் தலைவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்,
பாஜகவினரோ  எப்படியும் நாம்  ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று அதீத நம்பிக்கையில் இருந்தன!
இரு காட்சிகளின் தலைவர்களும்  இலங்கை தமிழ் எம்பிக்களிடம் உங்கள் தலைவர்களோடு வந்து பேசினால்தான் இதுபற்றி ஒரு தெளிவான தீர்மானத்திற்கு வரமுடியும் என்று தெரிவித்தன!

வடஇந்திய தலைவர்களுக்கு கொஞ்சம் நெருக்கமாக காட்டிக்கொள்ள வடஇந்திய பாணி ஷெர்வானி எல்லாம் அணிந்திருந்த அந்த இலங்கை தமிழ் எம்பிக்கள் உடனடியாக சென்னை வந்து திரு சம்பந்தன் அய்யாவிடம் இது பற்றி பேசினார்கள்.


அய்யா நீங்கள் டெல்லிக்கு வாருங்கள் அய்யா உங்களிடம் பேசித்தான் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று வேண்டி கொண்டனர்
அதற்கு அவர் :  
இப்போது இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கும்  சூழ்நிலையில் அவர்களுக்கு நாம் தொல்லை கொடுக்க கூடாது
தேர்தல் முடியட்டும் பின்பு பாஜவுடனும் காங்கிரஸுடனும் நாம் பேசலாம் என்று  பக்குவமாக கூறி டெல்லிக்கு தன்னால் வரமுடியாது என்பதை உணர்த்தினார்.
அப்புறம் தேர்தலும் முடிந்தது போரும் முடிந்தது சம்பந்தர் அய்யா விரும்பிய மாதிரியே எல்லாம் நடந்தது!
அய்யா சம்பந்தரின் ஆளுமையை பற்றி இந்த இடத்தில் நினைவில் நிறுத்துவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக