திங்கள், 15 ஜூலை, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் புரிந்துணர்வு - புதிய பதவி !

பலத்த பாதுகாப்புடன் டாக்டர் அர்ச்சுனா வெளியேறினார்: பேச்சுவார்த்தை நடத்த  கொழும்புக்கு வருமாறு அழைப்பு | TAMIL NEWS

தேசம் நெட் : வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளை மையப்படுத்தி புதிய பதவி !
சாவகச்சேரி வைத்தியசாலையில்  இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ”அரசாங்கமும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மத்திய அமைச்சின் கீழ் இல்லாத அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான 2 அல்லது 3 வருட செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் இதற்கான நிதியுதவிக்கான கோரிக்கைகளை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

அதற்கான பொறுப்பினை நான் எடுத்துக் கொள்வேன். அத்துடன் இந்த செயற்திட்டத்திற்கான தயாரிப்பாளராக என்னை இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்து நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென கேட்டிருந்தேன். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த செயற்திட்டத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக