திங்கள், 1 ஜூலை, 2024

நடிகர் விஜய் திரிஷாவோடு குடும்பம் .. சங்கீதாவோடு சேருங்கள் .. பாடகி சுசித்ரா அதிரடி

Suchitra leaks :மாலை மலர் :  சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்மையில் சுசித்ரா ளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் குறித்தும் நடிகர் தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதியில் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர். அதே நாளில் நடிகை த்ரிஷாவும் நடிகர் விஜய்யுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுசித்ரா நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை அவர் ஈகோவினால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள். லிப்டில் அவங்க எடுத்த போட்டோவை பதிவிட்டதில் இருந்து விஜயை திரிஷா சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்கள் என்று தெரிகிறது.

இதன்மூலம் திரிஷா விஜய்யுடன் இணைய விரும்புவதாகத் தெரிகிறது. ஏனெனில், நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளதன் மூலம் த்ரிஷாவும் அரசியலில் நுழைய விரும்புகிறார்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஒரு ஒட்டுண்ணி தான். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் யிடம் இருந்து அரசியல் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு அதன்பிறகு எம்.ஜி.ஆரையே ஒதுக்கி விட்டார். திரிஷாவும் ஜெயலலிதா போலவே இருக்க விரும்புகிறார். அதனால் விஜய் திரிஷாவை விட்டு விலகி, அவருடைய மனைவி சங்கீதாவுடன் இணையவேண்டும் என சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

இப்படி விஜய்யையும் திரிஷாவையும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவோடு அவர் ஒப்பிட்டு பேசி இருப்பது சமூக வலைதளத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக