திங்கள், 1 ஜூலை, 2024

ஆர்யன் ஆனந்த் - போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க ஸ்காலர்ஷிப் . கைது செய்யப்பட்டு டிப்போர்ட் செய்யப்பட்டார்

 Vimalathithan Balakrishnan  : ஆர்யன் ஆனந்த் வீட்டு முன் பெரும் கூட்டம் கூடியிருந்தது.
+2வில் 45% மதிப்பெண் பெற்று பாஸ் செய்திருந்தான்.
அவனுக்கு அமெரிக்காவின் லீஹ் கல்லூரியில் இருந்து அட்மிஷன் கிடைத்திருந்தது.
தவிர முழு கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யபட்டு,
அவனது விமான டிக்கட் முதல் உணவு வரை கல்லூரியே ஸ்காலர்ஷிப் ஆக கொடுப்பதாக கடிதம் எழுதி இருந்தது.
தவிர ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வந்து போக டிக்கட் இலவசம்
அவனது நண்பர்கள், உடன் படித்த மாணவ்ர்கள், உறவினர்கள் எல்லாம் கூடி "உனக்கு எப்படி இது எல்லாம் கிடைத்தது?" என நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவனது அப்பாவும் "ஏன்டா உனக்கு கூட்டல், கழித்தலே சரியாக தெரியாது. உனக்கு எப்படிடா அமெரிக்காவில் அட்மிஷன் கிடைத்தது" என கேட்டார்
யாருக்கும் தெரியாத விஷயம் என்னவெனில் ஆனந்த் இரு ஆண்டுகளாக இதை திட்டமிட்டான்.



படித்து முன்னேறுவது ஒரு வகை. பித்தலாட்டம் செய்து முன்னேறுவது மறுவகை. பத்தாவது சர்டிபிகேட்டை போர்ஜரி செய்தான். தான் படிக்கும் பள்ளியின் பெயரில் தானே ஒரு போலி வலைதளம் திறந்தான். அதன் ப்ரின்சிபல், ஆசிரியர்கள் பெயரில் இவனே அதில் மின்ன்னஜ்சலை உருவாக்கி, போலி சர்ட்டிபிகேட்டுகளை லீ-H கல்லூரிக்கு அனுப்பினான். அவனே பள்ளி ஆசிரியர்கள், ப்ரின்சிபல் பெயரில் "இவன் நல்லா படிக்கும் ஏழை மாணவன். அப்பா இறந்துவிட்டார். ஸ்காலர்ஷிப் கொடுங்கள்" என சேட் ஜிபிடியில் கடிதம் எழுதி மின்னஞ்சல் அனுப்பினான்.

அப்பா உயிருடன் தான் இருந்தார். அப்பா பெயரில் இறப்பு சான்றிதழை பெற்றுவிட்டான். எப்படி வாங்கினான் என இன்னும் தெரியவில்லை.
பத்தாவதில் இவன் வாங்கிய மதிப்பெண் 49%. அதை 91% ஆக மாற்றி பள்ளீ வலைதளத்தில் இருந்து அனுப்பியதால் அவர்கள் அட்மிஷன், ஸ்காலர்ஷிப் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். +2வது சர்ட்டிபிகேட்டையும் போலியாக அனுப்பினான். அடுத்து விசாவுக்கு சென்றான். ஸ்காலர்ஷிப் கிடைத்தது என சொல்லி விசாவும் வாங்கிவிட்டான்.

அடுத்து அமெரிக்காவுக்கு சென்றான். கல்லூரியில் போனால், அங்கே எதுவுமே புரியவில்லை. இவனே +2 தட்டு தடுமாறி பாஸ் செய்தவன். அமெரிக்காவில் பெரிய கல்லூரி பாடங்கள் புரியுமா என்ன? ஆனால் அதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தான். பரிட்சை எழுதும் அறையின் கதவு அருகே அமர்ந்திருப்பான். ஆசிரியர் போர்டை பார்த்து திரும்புகையில், நைசாக அறையை விட்டு வெளியே போய்விடுவான். போய் கேள்விதாளில் இருக்கும் கேள்விகளுக்கு கூகிளையும், சேட் ஜிபிடியையும் வைத்து பதில் எழுதுவான்.

அதன்பின் பரிட்சை முடியும் தருவாயில் மாணவர்கள் கூட்டமாக வந்து விடைத்தாளை சமர்ப்பிக்கும் நேரம், நைசாக உள்ளே வந்து கூட்டத்தோடு, கூட்டமாக இவனது விடைத்தாளையும் கொடுத்துவிடுவான். இப்படி கல்லூரியிலும் முதலிடம் பெற்று ராஜாவாக வாழ்ந்து வந்தான்
ஆனால் மேலும் பணம் சம்பாதிக்கவேண்டுமே? பிராக்டிகல் டிரெய்னிஙுக்கு வேலை செய்ய அனுமதி வாங்கி, போலியாக ரெசுமே தயார் செய்தான். ஒரு மார்க்கடிங் வேலைக்கு சேர்ந்தான். மாதம் 1.25 லட்சம் சம்பளம்
இப்படி உலகம் முழுவதையும் முட்டாளாக்கி முன்னேறியவன் வாழ்க்கையில் கிளைமாக்ஸ் வரணுமே? வந்தது. விதி விளையாடியது.

ஒரு சுபயோக சுபதினத்தில் ரெட்டிட் தளத்தில் தனது சாகசங்கள் முழுவதையும் அவனே எழுதினான். அனானிமஸ் ஆக எழுதினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தான். ஆனால் மாடரேட்டர் ஒருவர் அவனது புரொபைலில் லீஹ் பல்கலைகழகத்தை அவன் பின் தொடர்வதை பார்த்தார். பல்கலைகழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினார்

அதன்பின் போலிஸ் அவனது அறைக்கு விரைந்தது. கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டான். பல்கலைகழகம் அவனை டிஸ்மிஸ் செய்தது. அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு டீபோர்ட் செய்யபட்டான்.
இத்தனை சாகசங்களை செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்து இறங்குகையில் அவனது வயது 19 தான்
நாக்கிலே இருக்கிறது மனுசனுக்கு நன்மையும் தீமையும்.
😡😡ஆர் ய ன் ஆனந்த்...
அவாள் இடம் கேட்டு பாருங்கள் அவா ள் சொல்வார்கள் புள்ளைக்கு எவ்வளவு அறிவு பத்தியா வெள்ளைக்காரனே யே ஏமாத்தி இருக்கான்...
......
Vimalathithan Balakrishnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக