சனி, 1 ஜூன், 2024

Exit Poll 2024 இந்தியா கூட்டணி 295+ இடங்களில் வெல்லும்.. மெஜாரிட்டி!

 tamil.oneindia.com  - Shyamsundar : சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடந்தது.
காங்கிரஸ்; இந்த நிலையில் ; 2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.



முதல் ஆளாக நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியே இந்தியா கூட்டணி பற்றி அறிவித்துள்ளது.

2019 லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்தது.

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி தலைமையிலான "மோடி கேரண்டி" கோஷத்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார்.

English summary

Lok Sabha election Exit Poll Results 2024: INDIA alliance will win 295+ seats says Congress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக