சனி, 29 ஜூன், 2024

கொடநாடு வழக்கில் இன்டர்போல்... சட்டமன்றத்தில் CM.ஸ்டாலின் அறிவிப்பு!

 மின்னம்பலம் - Selvam  :  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 29) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார். தொடர்ந்து மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “மிக முக்கியமான வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்கு தெரிவிப்பதை எனது கடமையாக கருதுகிறேன்.
கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.



அவர்களிடம் இருந்து 8,000 பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே அதனை இன்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக