சனி, 15 ஜூன், 2024

தமிழ்நாட்டு உள் விவகாரங்களில் தலையிடலாமா? இலங்கை உள் விவகாரங்களில் தலையிடலாமா?

 Sundaram  :  திராவிட எதிர்ப்பு அரசியலை இணையத்தில் முன்னெடுத்து பரப்புரை செய்வதையே முழு நேர வேலையாகக் கொண்டிருப்பவர்கள் 99%பேர் இலங்கைத் தமிழர்... (புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்களும்)
ஏன் இந்த நிலைமை?
தமிழ்நாட்டு அரசியலில் இவர்களுக்கு என்ன அக்கறை?
இது இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் செயல் இல்லையா?

ராதா மனோகர்  : நீங்கள் கூறுவது உண்மைதான்
இதில் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் ஊடகங்கள் பல பெரிய பிரமுகர்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் பாரதூரமாக தலையிடுகிறார்களே?
அதையும் கொஞ்சம் நிறுத்தவேண்டும்


இலங்கையிலும் உலகெங்கிலும் தடைசெய்ப்பட்ட பயங்கரவாத இயக்கத்தையும் தலைவர்களையும் தமிழ்நாட்டில் கட்டவுட் வைத்து அரசியல் செய்வதை மத்திய மாநில அரசுகள் ஏன் இன்னும் வேடிக்கை பார்க்கிறது?
இதைத்தான் நாம் நீண்ட காலமாக கூறிவருகிறோம்
இலங்கை என்பது இலங்கைதான்
ஆனால் இலங்கை அரசை சிங்கள அரசு என்று இன்றுவரை எல்லா ஊடகங்களுக்கும் கொஞ்சம் கூட யோசனை இன்றி கூறுகிறார்களே
இது இலங்கையில் வாழும் தமிழர்களை பாதிக்காதா?
அதையும் நிறுத்த வேண்டும் இதையும் கொஞ்சம் நிறுத்த வேண்டும்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக