புதன், 12 ஜூன், 2024

சன் டிவியும் திமுகவும்- திமுகவிற்கு எதிரான, காலம் காலமாக நடக்கும் சதி!

 Kandasamy Mariyappan  :   சன் டிவியும்  திமுகவும்......
சன் குழுமத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
பல பொது மக்களிடம் உரையாடும் பொழுது, 1990 முதல் மத்தியில் அதிகாரத்தில் இருந்து கொண்டு, சன் டிவி தவிர வேறு யாரையும் தொலைக்காட்சி ஆரம்பிக்க விடாமல் செய்து,
பல லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்த திமுக, கொரோனா நிவாரண நிதியாக ஒரு 100 கோடி கொடுத்தா என்ன என்று கேட்கின்றனர்.
இதைத்தான் திமுகவிற்கு எதிரான, காலம் காலமாக நடக்கும் சதி என்று கூறுகிறேன்.
முதலில் தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல நிறுவனங்களைப் போன்று... சன் குழுமமும் பணம் கொடுப்பது... அவர்களது விருப்பம்.
அதேபோன்று... பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் நிவாரண பணம் கொடுப்பது போன்று திமுக பணம் கொடுப்பது அவர்கள் விருப்பம்.
அடுத்து,
1. சன் டிவி ஆரம்பித்த வருடம் ஏப்ரல், 1993.
1991 - 96ல் மாநிலத்தில் அதிமுக அரசு, மத்தியில் அதிமுகவின் 11 MPக்களின் தயவோடு இருந்த திரு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு.
2. அதே வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களான JJ TV, Vijay TV, Raj TV.... எங்கே இந்த நிறுவனங்கள்!!!??
3. மேலும் அது ஒரு தொழில் (Business), அதில் சன் குழுமம் வெற்றி பெற்றுள்ளனர். அவ்வளவுதான். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம்!!!
4. சன் டிவிக்கு அரசியல் ஆதரவு என்றால்.... ஏன் JJ, Jaya தொலைக்காட்சி வெற்றி பெற முடியவில்லை!
TATA, Birla, Reliance, Adani, Infosys, Wipro, Airtel போன்ற நிறுவனங்களும் அரசியல் ஆதரவு இல்லாமல் தான் இவ்வளவு தூரம் வளர முடிந்ததா!!??
ஏன் அவற்றை கேள்வி கேட்கவில்லை!!
5. கடந்த 10 ஆண்டுகளாக திமுக அதிகாரத்தில் இல்லை, பிறகு ஏன் மற்ற நிறுவனங்களால் சன் டிவியை வெற்றி பெற முடியவில்லை.
திமுகவை அழிக்க வேண்டும் என்று சுற்றித் திரியும் ஒரு கும்பல்.....,
சம்மந்தம் இல்லாமல் உளறிக் கொட்டும் பல குப்பைகளில் ஒன்றுதான் சன் டிவி, திமுக உறவு.
ஆனாலும் தமிழ்நாட்டில் இருந்து....
1. மத்திய அரசு பணி என்ற முறையில் வடக்கத்தியர்கள் நமது பணத்தை எடுத்து செல்வதை...
2. தொழில் என்ற முறையில் வடக்கத்திய நிறுவனங்கள் நமது பணத்தை எடுத்து செல்வதை...
3. நமது இயற்கை வளங்களை வடக்கத்தியர்கள் கொள்ளையடித்து செல்வதை....
4. வடக்கத்திய நிறுவனங்கள் இங்கே தொழில் செய்வதால், குறைந்த சம்பளத்திற்கு வடக்கத்திய தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி,  நமது வாயப்ப்களை பறிப்பதன் மூலம் நமது மாநிலத்தில் பணப் புழக்கத்தை குறைப்பதை...
எல்லாம் இந்த மக்கள் விரோத கும்பல் பேச மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக