ஞாயிறு, 16 ஜூன், 2024

எலன் மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர் - எதிர்த்து நீதிமன்றம் செல்லும் பங்குதாரர்கள்

 tamil.goodreturns.in  :   உங்க பேராசைக்கு அளவே இல்லையா? – எலான் மஸ்க்கிற்கு குட்டு வைக்கும் பங்குதாரர்..!
அமெரிக்கா: எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு 56 பில்லியன் டாலர்களை மொத்த ஊதியமாக வழங்குவதற்கு முக்கிய பங்குதாரரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய மொத்த ஊதியமாக 56 பில்லியன் டாலர்களை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக வரும் வியாழக்கிழமை பங்குதாரர்கள் அனைவரும் பங்கேற்கும் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்த நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக இருக்கக்கூடிய நார்வே எண்ணெய் நிதியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நார்வே எண்ணெய் நிதியம் மொத்தம் 1.7 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது. இது உலகின் முன்னணி நிறுவனங்களில் எல்லாம் கணிசமான பங்குகளை வைத்துள்ளது. எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்திலும் 1 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இதன் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த நிறுவனம் பொதுவாகவே நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கோடி கோடியாக ஊதியம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே எலான் மஸ்கிற்கு பெரிய தொகையை ஊதியமாக வழங்க நார்வே எண்ணெய் நிதியம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த சூழலில் மீண்டும் இந்த வாரம் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பிலும் ஊதிய தொகைக்கு எதிராக வாக்களிக்க போவதாகவும், தங்களது நிலைப்பாடு மாறவில்லை என்றும் நார்வே எண்ணெய் நிதியம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தலைமை செயல் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகையை ஊதியமாக வழங்குவதற்கு காலம் காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது இந்த நிதியம்.

ஆப்பிள், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், மற்றும் எல்விஎம்எச் ஆகிய நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய தொகையை ஊதியமாக வழங்குவதற்கு எதிராக வாக்களித்தது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை நாம் இதுவரை கண்டிராத அளவை எட்டியுள்ளது என குற்றம் சாட்டியுள்ள இந்த நிதியத்தின் தலைமை நிர்வாகி நிக்கோலாய் டாங்கென், இது நிறுவன பங்குதாரர்களுக்கு மிகவும் செலவு மிக்கதாக மாறி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐடி எல்லாம் பழைய கதை பாஸ்.. அமெரிக்க மருத்துவத்துறையில் மாஸ் காட்டும் NRI டாக்டர்கள்..! ஐடி எல்லாம் பழைய கதை பாஸ்.. அமெரிக்க மருத்துவத்துறையில் மாஸ் காட்டும் NRI டாக்டர்கள்..!

டெஸ்லா தலைமை கூட்டத்தில் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை முன்வைப்போம் என்றும், எலான் மஸ்கிற்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைக்க வேண்டும் என்பது குறித்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மஸ்கின் தலைமையின் கீழ் டெஸ்லா நிறுவனம் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதில் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக வழங்க வேண்டுமா என்பது தான் எங்களுடைய கேள்வி என இந்த நிதியம் கூறியுள்ளது.

அதே வேளையில் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து டெஸ்லா தலைமைக்கு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் ஊழியர்களுக்கு எதிரான கொள்கைகளை டெஸ்லா நிறுவனம் செயல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்மையில் கூட அந்நிறுவன ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே ஊழியர்களின் உரிமைகளை காக்கும் வகையில் செயல்படுமாறு டெஸ்லாவுக்கு இந்த நிதியம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்கின் ஊதியம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் இவ்வளவு பெரிய தொகையை ஒருவருக்கு ஊதியமாக வழங்குவது நியாயமற்றது குறிப்பாக நிறுவன பங்குதாரர்களுக்கு இது அதிக சுமையை கூட்டும் எனக் கூறி இதற்கு தடை விதித்தது.

 ilakkiyainfo.com :   எலன் மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க்கிற்குச் சம்பளமாய் 56 பில்லியன் டொலர் கொடுப்பதற்கு ஆதரவாக அதன் பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.

டெஸ்லாவின் பங்கு விலையைப் பொறுத்து அவரின் துல்லியமான சம்பளத் தொகை மாறுபடும். இது உலகின் பெரும் செல்வந்தரான மஸ்க் கடந்த ஆண்டு ஈட்டியதை விட 300 மடங்கு அதிகமாகும்.

இவ்வாண்டு ஆரம்பத்தில் டிலவேர் நீதிபதி, மஸ்க்கிற்குப் பரிந்துரைக்கப்பட்ட அவ்வளவு பெரிய சம்பளத் தொகையை நிராகரித்தார். இந்நிலையில் நிறுவனத்தை டிலவேரிலிருந்து டெக்சஸுக்கு மாற்றும் திட்டத்தையும் பங்குதாரர்கள் அங்கீகரித்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து தப்புவதற்கு அது உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.

மஸ்க்கிற்கு மிதமிஞ்சிய சம்பளம் கொடுக்கப்படுவதற்கு எதிராகச் சிறிய முதலீட்டாளர் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். சம்பளம் நியாயமற்றது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் பங்குதாரர்களின் அண்மைய வாக்களிப்பை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக