திங்கள், 27 மே, 2024

தந்தை செல்வாவின் ( SJV ) துரோகிஸமும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்

May be an image of 1 person, briar and text
Hon .G.G.Ponnambalam

ராதா மனோகர் : துரோகம் என்ற சொல்லை  ஒரு அரசியல் கோட்பாடாகவே  மாற்றியவர்கள்,
 திரு  SJV  செல்வநாயகம் திரு    EMV நாகநாதன் சம்பந்திகள்!
முழு இலங்கைக்குமான முதல் தேர்தலில் (1911 - படித்த இலங்கையர்கள் தொகுதி) வெற்றி பெற்று முழு இலங்கைக்குமான உறுப்பினராக தெரிவான  திரு பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் குடும்பத்தினர்  இலங்கை முழுவதையும் ஒரே நாடாகதான் கருதினார்கள்!
இவர்களின் வழியில் வந்த பலரும் இந்த அரசியலைதான் தொடர்ந்தார்கள்!
அதற்கேற்பவே தங்கள் அரசியலையும் வாழ்வியலையும் முன்னெடுத்தார்கள்
இக்குடும்பத்தின் முக்கியமான சொத்துக்கள் தென் இலங்கை முழுவதும் விரவி இருக்கிறது .
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இக்குடும்பத்தினரின் ஆதிக்கம் இன்று வரை இருக்கிறது



மலையக மக்களின் வாக்குகள் இலங்கையை ஒரு கம்யூனிஸ்டு நாடாக்கி விடும் என்ற நிலைமை உருவான போது,
திரு .டி எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த திரு அருணாசலம் மகாதேவா அந்த கம்யூனிச வாக்கு வங்கியை இல்ல்லாமல் செய்வதில் பெரும்பங்கு ஆற்றினார்
பின்பு சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் திரு ஜி ஜி பொன்னம்பலத்தால் தோற்கடிக்கப்படடார் .
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக மிக மிக நெருங்கிய தொடர்புகள் இருந்த காலக்கட்டம் அது.
அப்போதெல்லாம் இலங்கையின் இந்திய தூதர் பதவி என்பது இலங்கையின் உதவி பிரதமர் பதவிக்கு ஒப்பானது.
அந்த பொறுப்பை திரு அருணாசலம் மகாதேவாவிடமே திரு டி எஸ் சேனநாயக்க ஒப்படைத்திருந்தார்
அடிப்படையில்  திரு . அருணாசலம் மகாதேவா அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவராகும்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மற்றும் மலையக மக்களின் நலன்களில் எந்த இலங்கை தமிழ் தலைவரையும் விட ,
எந்த சிங்கள தலைவரையும் விட நேர்மையாக  புத்திசாலியாக திரு அருணாசலம் மகாதேவா அவர்கள் நடந்து கொள்வார் என்று இந்திய இலங்கை அரசுகள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தன.
பிரித்தானிய எதிர்ப்பை விட கம்யூனிச ஆபத்து என்ற விடயமே முழு தெற்கு ஆசியாவையும் அன்று அச்சுறுத்தி கொண்டிருந்தது.

இலங்கையின் கம்யூனிச வாக்குவங்கியை காலாவதியாக்கும் நடவடிக்கையை,
 இந்திய வம்சாவளி மக்களோ மலையக மக்களோ இந்திய அரசு மீது கோபம் கொள்ளாத விதத்தில் மிக தந்திரமாக திரு அருணாசலம் மகாதேவா திரு நடேசபிள்ளை போன்றவர்கள் முன்னெடுத்தனர். (ஐ தேக சுவாமிநாதனும் விக்கினேஸ்வரனும் இக்குடும்ப வாரிசுகள்தான்)
இவர்களுக்கு பக்கபலமாக தென்னிலங்கையில் செல்வாக்கோடு இருந்த இந்திய முதலாளிகளும் பக்கபலமாக் இருந்தனர்! கம்யூனிச அபாயம் அந்த அளவு அவர்களை அச்சுறுத்தியது!  

இலங்கை சிறுபான்மை மக்களுக்கு 50 வீத உறுப்புரிமையை கோரிய திரு ஜி ஜி பொன்னம்பலம் அது நிராகரிக்கப்பட்ட நிலையில்
திரு அருணாசலம் மகாதேவா அவர்கள் சிறு பான்மை இன மக்களுக்கு   40 வீத உறுப்புரிமை வழங்க இலங்கை அரசு தயாராக இருப்பதாக திரு ஜி ஜி பொன்னம்பலத்திடம் தெரிவித்தார்.
இதை ஏற்று கொண்ட திரு ஜி ஜி பொன்னம்பலம் இதற்கு மலையக தலைவர்களின் ஆதரவை நாடினார்.
கெடுவாய்ப்பாக அதை அடியோடு புறந்தள்ளினார்கள் மலையக தலைவர்கள்.
அப்போது மலையாக மக்களின் அமைப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த திரு அப்துல் அஸீஸ் ( சிந்தி மொழி பேசும் பம்பாய்க்காரர்) அவர்கள் இலங்கையை நாம் ஒரு இடதுசாரி சோஷலிச குடியரசாக உருவாக்குவோம்.
அப்போது இந்த பிரச்சனை எல்லாம் சோஷலிச அரசியலமைப்பு மூலம் இல்லாமல் செய்யப்படும் என்று  கூறி  திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் ஆலோசனையை தூக்கி எறிந்தார்.

  அந்த காலக்கட்டங்களில் இந்திய மக்கள் வேலை தேடியும் வியாபார நோக்கமாகவும் இலங்கைக்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.
இது சிங்கள பெரும்பான்மை தலைவர்களை அச்சம் கொள்ளவைத்தது.
இலங்கையை நிரந்தர வசிப்பிடமாக கொள்வோருக்கு மட்டும்தான் இலங்கை குடியுரிமை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்து பலமாக வேரூன்றியது.
ஆகவே முழு இந்திய மக்களின் வாக்குரிமையை நீக்க வேண்டும் எனவும் பின்பு அவர்களின் தகுதி அடிப்படையில் ஒவ்வொருவராக பரிசீலித்து குடியுரிமை கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள்  தீர்மத்திருந்தார்கள்
இந்த தீர்மானம் இந்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்தைகளின் பயனாக எட்டப்பட்டிருந்தது.
குடியுரிமை நீக்க சட்டத்தின் பின்வந்த இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம் இதுதான்
இந்த சட்டத்தின் மூலம் தலைவர்களும் முதலாளிகளும் வசதி படைத்தோரும் மட்டுமல்ல  சரியான சமயத்தில்  
விண்ணப்பித்த பலரும்  குடியுரிமை பெற்று கொண்டனர்
இந்த ஏற்பாட்டை புறக்கணிக்குமாறு மலையக தலைவர்களும் செல்வநாயகம் நாகநாதன் வகையறாக்களும் கடுமையாக பிரசாரம் செய்தனர்
குடியுரிமைக்கு இரண்டு வருட கால அளவு அறிவிக்கப்பட்டிருந்தது
 அதில் ஒன்றரை வருடங்களாக  இந்த தலைவர்களின் விண்ணப்ப புறக்கணிப்பை  அப்பாவி மக்கள்  பின்பற்றினர்
அதாவது விண்ணப்பம் அனுப்ப மறுத்தனர்.
திரு டி எஸ் சேனநாயக்காவின் அரசு அறிவித்த காலக்கெடு இன்னும் ஆறுமாதங்களே உள்ள நிலையில்தான் ஞானோதயம் வந்து விண்ணப்பங்களை அனுப்ப தொடங்கினார்கள்
ஒழுங்கான அத்தாட்சி பத்திரங்கள் பலரிடமும் இருக்கவில்லை!
ஆனால் இந்திய முதலாளிகளும் தலைவர்களும் பிரமுகர்களும் ஏற்கனவே உரிய காலத்தில் விண்ணப்பங்களை அனுப்பு தங்கள் குடியுரிமைகளை பெற்று கொண்டனர்.  

இடது சாரிகள் கம்யூனிச ஆபத்து ஒருபுறமும,
குறைந்த கூலியில் வேலை செய்ய இந்திய தொழிலாளர்கள் தயாராக இருந்தமையால் சிங்கள தொழிலாளர்களின் வெறுப்பு மறுபுறமும் சேர்ந்து  நிலமையையே கடுமையாக்கி இருந்ததது

இந்த நிலையில்தான் இதை புரிந்து கொண்ட  திரு ஜி ஜி பொன்னம்பலம் இலங்கை அரசோடு ஒற்றுமையாக செயல் பட்டு பொருளாதார விரிவாக்க அரசியலை முன்னெடுத்தார்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் மற்றும் (ஜான் ஜெபரத்தினம்) EMV நாகநாதன் போன்றார் தங்கள் துரோக அரசியல் கடையை திறந்தார்கள்
எந்த வித அரசியல் கோட்பாடும் திட்டங்களும் இன்றி வெறுமனே ஜி ஜி பொன்னம்பலத்திடம் இருந்து அரசியலை கைப்பற்றும் நோக்கோடு மட்டுமே இந்த இருவரின் அரசியல் அமைந்தது
இடதுசாரிகளின் வரலாற்று குற்றத்தை அல்லது தவறை மறைத்ததன் மூலம்  திரு எஸ் ஜெ வி செல்வநாயகம்
ஏ எம் வி நாகநாதன் சம்ளபாந்திகள் இடதுசாரிகளை காப்பாற்றினார்கள் .

இந்த பழியை தூக்கி ஜி ஜி பொன்னம்பலத்தின் தலையில் போட்டார்கள்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் .
மறுபுறம் இடதுசாரிகள்  கடுமையான வரலாற்று விமர்சனத்தில் இருந்து தப்பினார்கள்
செல்வநாயகம் தமிழர் அரசியலை கைப்பற்றினர்

இந்த இருவரும்தான் வெறும் துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே  தரமுயர்த்தினார்கள்

இவர்களின் இந்த துரோகம் என்ற ஒற்றை சொல் இன்றுவரை தமிழர்களை சுயமாக சிந்திக்க விடாமல் தோற்கடித்து கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில் இந்த இருவரின் வாரிசுகள் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு சுகமாக  நலமாக வசதியாக வாய்ப்புக்களோடு வாழ்கிறார்கள்.
இந்த இருவரின் பின்னால் சென்றவர்கள் ( திரு அமிர்தலிங்கம் திரு ராசதுரை , பிரபாகரன் உட்பட) வாழ்க்கையை தொலைத்தார்கள் .
Ganapathippillai Gangesar Ponnambalam  ((ஜி ஜி பொன்னம்பலம் )
Samuel James Veluppillai Chelvanayagam (எஸ் ஜெ வி செல்வநாயகம் )
EMV Naganathan son of John Jebaratnam Hensman (இ எம் வி நாகநாதன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக