செவ்வாய், 14 மே, 2024

Red Pix பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-வரை ரிமாண்ட்!

 மின்னம்பலம் - Selvam :  சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அவதூறாக பேசி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் தான் ஏ1ஆக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பிரஸ் கவுன்சிலில் முறையிட சென்ற பெலிக்ஸை கடந்த மே 11-ஆம் தேதி திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து ரயில் மூலமாக பெலிக்ஸ் இன்று சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் சென்னையில் இருந்து போலீஸ் வாகனம் மூலம் திருச்சி அழைத்து செல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் பெலிக்ஸை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மே 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக