ஞாயிறு, 5 மே, 2024

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர் தலைமறைவு

 மாலைமலர் : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
கொலையா? அல்லது தற்கொலையா? என்பதில் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் வழக்கின் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்குவதற்காக கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் விவரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

இதற்கிடையே, ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், இன்று மாலைக்குள் வழக்கின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீஸ் மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக