ஞாயிறு, 19 மே, 2024

சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் : தவறை உணர்ந்துவிடேன்

 ‘நக்கீரன்  : தவறை உணர்ந்துவிடேன்’ - மன்னிப்பு கேட்ட சவுக்கு சங்கர்
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக திருச்சி முசிறி டிஎஸ்பி யாஸ்மின்  அளித்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவதூறாக பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார்.



ஆனால் அந்தப் புகாரை பெண் காவலர்கள் மறுத்தனர். இதன் பின்னர் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, போலீஸ் காவலில் கொடுத்தால் அவர் தாக்கப்படுவார். எனவே கஸ்டடி தரக்கூடாது என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து ஒருநாள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் 28 ஆம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதையடுத்து கோவை மத்திய சிறைக்கு மீன்று சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் விசாரணை அதிகாரிகளிடம் பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சவுகுக்கு சங்கர் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஒருநாள் போலீஸ் காவலில், விசாரணை அதிகாரியான ஏ.டி.ஜி.பியிடம் சவுக்கு சங்கர் மன்னிப்பு கோரியதாகவும், தரகுறைவான வார்தைகளை பேசியது தவறு என்று மனப்பூர்வமாக தற்போது உணர்ந்துவிட்டதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக