வெள்ளி, 17 மே, 2024

சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருந்த திமுக அமைச்சர்கள்!

 மின்னம்பலம் - Aara :  பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு மேலும் பல வழக்குகளிலும் கைதாகியிருக்கிறார் யு ட்யூபர் சவுக்கு சங்கர்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்று போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
ஏற்கனவே சவுக்கு சங்கரின் செல்போன், லேப்டாப் மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை இட்ட போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சங்கரோடு வழக்கமான தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்றும், அவருடன் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டவர்கள் யார் யார் என்றும் போலீஸாருக்கு தெரியவந்தது.



அதில் சங்கரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு வந்தவர்களில் 2 திமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அந்த தகவலை ஆட்சி மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறது போலீஸ்.

மேலும், சம்பந்தப்பட்ட அந்த இரண்டு அமைச்சர்களுக்கும், ‘உங்கள் தரப்பிலிருந்து சவுக்கு சங்கருடன் சிலர் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்து இருந்தார்களா அல்லது தெரியாமல் இருந்தார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி தெரிவிக்குமாறு’ அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் போலீஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.

மேலும், சங்கரோடு சில ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளும் ரெகுலர் டச்சில் இருந்ததும், அவருக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அவர்கள் பரிமாற்றம் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவல்களும் ஆட்சி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக